- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி கடைசி வெள்ளி மகாலட்சுமி வழிபாடு

ஆடி கடைசி வெள்ளி மகாலட்சுமி வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. கூடவே வரலட்சுமி நோன்பும் சேர்ந்து வந்திருக்கிறது. அஷ்டலஷ்மிகளின் ஐஸ்வர்யங்களையும் நாம் பெற வேண்டும் என்றால் நாளைய தினம் செய்ய வேண்டிய எளிமையான ஒரு வழிபாட்டு முறையைத்தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நாளைய தினம் ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விரதம் தான் இந்த வரலட்சுமி விரதம். பெரிய அளவில் செலவு செய்து உங்களால் இந்த வரலட்சுமி விரத வழிபாட்டை மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. நாளை தினம் கட்டாயம் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்து பிரார்த்தனை வையுங்கள்.

- Advertisement -

ஒரே ஒரு செட் வெற்றிலை பாக்கு, பூ பழம், இரண்டே இரண்டு கண்ணாடி வளையல் வைத்து யாராவது ஒரு சுமங்கலி பெண்ணுக்கு தானம் செய்தாலும் அது சிறப்பு. உங்கள் வீட்டிற்கு யாரையும் அழைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. கோவிலுக்கு சென்று அங்கு வரும் ஒரு சுமங்கலி பெண்களுக்கு உங்கள் கையால் இந்த தாம்பூலத்தை தானம் செய்வது மிக மிக சிறப்பான பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து உங்களுடைய வீட்டிலும் சின்னதாக மகாலட்சுமிக்கு ஒரு பூஜை செய்யுங்கள்.

வழக்கம்போல விளக்கு ஏற்றி, தீப தூபங்கள் ஏற்றி வைத்து விடுங்கள். மகாலட்சுமிக்கு உங்களால் முடிந்த பிரசாதம் நெய்வேத்தியமாக வையுங்கள். பிறகு ஒரு சின்ன கிண்ணத்தில் வெட்டிவேர் வைத்து, அதை மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து விடுங்கள். பிறகு உங்களுடைய வேண்டுதலை தாயாரிடம் வைக்கலாம்.

- Advertisement -

பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வழிபாட்டை முடித்து, இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த வெட்டிவேரை அப்படியே எடுத்துக் கொண்டு போய் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். ஆடி மாதம் கடைசி வெள்ளி, மகாலட்சுமியை நினைத்து இந்த பூஜையை செய்து வெட்டிவேரை பீரோவில் வைத்தால் வருமானம் பெருகும் என்பது நம்பிக்கை.

உங்கள் கஷ்டங்களுக்கெல்லாம் விரிவு காலம் பிறக்கும். வெட்டிவேருக்கு இயற்கையாகவே நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. இந்த நேர்மறை ஆற்றலானது உங்கள் பீரோ முழுவதும் பரவி நிச்சயம் மகாலட்சுமி அருட்கடாட்சம் கிடைத்து. பணவரவை அதிகரிக்கும். அதற்காகத்தான் இந்த வழிபாடு.

இதையும் படிக்கலாமே: வரலட்சுமி விரதத்தன்று சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்

முடிந்தால் ஒரு சின்ன கிண்ணத்தில் வெட்டிவேரை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி போட்டு உங்களுடைய வீட்டில் ஆங்காங்கே வைத்து விடுங்கள். இந்த வாசம் உங்களுக்கு மன நிம்மதியையும் கொடுக்கும். வீட்டில் சந்தோஷம் பிறக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நாளை தினம் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்