நமக்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்ததாக திகழ்கின்றன. அந்த பொருட்களின் சத்துக்களை உணர்ந்து நாம் செயல்பட்டோம் என்றால் எந்தவித செலவும் இல்லாமல் வேண்டாம் என்று தூக்கிப் போடக்கூடிய பொருளை வைத்து கூட அழகான சருமத்தை நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு பொருளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
நம்முடைய முகம் மிருதுவாக இருக்க வேண்டும், முகத்தில் பருக்கள் இருக்கக்கூடாது, கண்களை சுற்றி கருவளையம் இருக்கக் கூடாது, முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கக் கூடாது என்று நாம் எதிர்பார்ப்போம். இவை அனைத்தையும் பெறுவதற்கு பல கிரிமிகளையும், ஃபேஸ் பேக்களையும் உபயோகப்படுத்துவோம். இவை அனைத்தையும் செய்வதற்கு என்று செலவுகள் ஆகும். ஆனால் நாம் சாதாரணமாக வாங்கக்கூடிய ஒரு பொருளை முறையாக நாம் பயன்படுத்தினோம் என்றால் இந்த பிரச்சினைகள் அனைத்துமே நீங்கும். அதைப்பற்றி தான் பார்க்க போகிறோம்.
அனைவரின் இல்லங்களிலும் யாராவது ஒருவராவது தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தில் இருப்பார்கள். வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்திருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். வாழைப்பழத்தில் எந்த அளவிற்கு பொட்டாசியம் சத்து நிறைந்திருக்கிறதோ அதே அளவிற்கு வாழைப்பழ தோலிலும் பொட்டாசியம் சத்து என்பது நிறைந்திருக்கிறது.
தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பொழுது வாழைப்பழத் தோலின் உள்புறத்தை எடுத்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகம் வெண்மையாக மாறும். மேலும் இந்தத் தோலை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நம்முடைய முகத்தில் தடவி பேஸ் பேக்காக போடும் பொழுது மிருதுவான சருமத்தை பெற முடியும்.
முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், மருக்கள் இவை அனைத்தும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைப்பழத் தோலை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் வைத்து பிளாஸ்டிரி போட்டு ஒட்டிவிட்டு இரவு படுத்து தூங்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ச்சியாக செய்தாலே முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் நீங்குவதை நம்மால் பார்க்க முடியும்.
முகத்தில் அதிக அளவில் பருக்கள் இருக்கிறது, அதனால் வலிகளும் அதிகமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள், பருக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் வாழைப்பழத் தோலை வைத்து ஐந்திலிருந்து பத்து நிமிடம் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பருக்கள் விரைவில்லையே மறைவதையும் அதே சமயம் வலிகள் குறைவதையும் உணர முடியும்.
இதே போல் தான் கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையம் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைப்பழத் தோலை வைத்து கண்களை சுற்றி மிருதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே அவர்களுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே மிருதுவான பாதங்களை பெற
வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை வேண்டாம் என்று தூக்கி எறிவதற்கு பதிலாக அந்த தோலை பயன்படுத்தி நம்முடைய அழகை அதிகரித்துக் கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்கள்.