பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எல்லோருக்கும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. எல்லோருக்கும் ஏதோ ஒரு கடன் பிரச்சனை இருக்கிறது. உங்களுக்கான பண தேவை இன்றைய சூழ்நிலையில் எவ்வளவு. 50,000 தேவைப்படுகிறதா, ஒரு லட்சம் தேவைப்படுகிறதோ, உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள நீங்கள் எவ்வளவு பணம் தேவை என்று நினைத்துக் கொள்கிறீர்களோ, அந்த பணத்தையும் பின் சொல்லக்கூடிய ஏஞ்சல் நம்பரையும், இன்று இரவு இப்படி எழுதினால் அடுத்த ஓரிரு நாட்களில் உங்களுக்கான அந்த பணத்தேவை பூர்த்தியாகும்.
ஏனென்றால் இன்று ஆவணி மாதம் முழு பௌர்ணமி நிலவு, சந்திர பகவான் பிரகாசமாக உதயமாகும் நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கையை வந்து சேரும்.
பண தேவையை பூர்த்தி செய்யும் பௌர்ணமி பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு பிரியாணி இலை, ஒரு நீல நிற பேனா ஸ்கெட்ச் ஏதாவது ஒன்று தேவை. இந்த பரிகாரத்தை வெட்டவெளியில் அமர்ந்து மாலை 6:30 மணிக்கு மேல் செய்வது சிறப்பு. ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ‘5266797’ என்ற இந்த நம்பரை முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை இருக்கிறது அதையும் எழுதுங்கள்.
உதாரணத்திற்கு ‘50,000 பணம் தேவை’ இப்படி எழுதி இந்த பிரியாணி இலையை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு சந்திரனைப் பார்த்தவாறு உங்களுடைய பிரார்த்தனையை வைக்கவும். கூடிய சீக்கிரம் இந்த பணம் என் கைக்கு வரும். என்னுடைய தேவைகள் பூர்த்தியாகும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட பணம் தேவைப்படலாம், மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படலாம். அல்லது அவசரமாக யாருக்காவது பணத்தை திருப்பி தர வேண்டிய சூழ்நிலை இருக்கலாம். அல்லது சுபகாரிய நிகழ்ச்சிகள் நடத்த பணம் தேவைப்படலாம். வெளிநாடு செல்ல சில பேருக்கு பணம் தேவைப்படும். இப்படி உங்களுடைய அவசர தேவைக்கு எவ்வளவு பணம் உங்கள் கைக்கு வர வேண்டுமோ, அந்த பணத்தை பிரியாணி இலையில் எழுதி 5 நிமிடம் பிரார்த்தனை வைக்கவும்.
பிறகு ஒரு அகல் விளக்கு ஏற்றி அந்த பிரார்த்தனை நிறைவேறியதாக மானசீகமாக நினைத்துக் கொண்டு அந்த பிரியாணிஇலையே அந்த நெருப்பில் பொசிக்கி விடுங்கள். அவ்வளவுதான் பரிகாரம். (கொடுத்த கடன் வசூலாக வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.) பொசுக்கிய இந்த சாம்பலை தண்ணீரில் கலந்து கீழே ஊற்றி விடலாம். இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு இன்று பௌர்ணமி இரவு நிலவு ஒளியில் செய்தால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர ஆவணி மாத பௌர்ணமி பரிகாரம்
நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உங்களுடைய தேவை நிறைவேறும் அதிசயம் நிச்சயம் நடக்கும். அப்படி நிறைவேறினால் அடுத்தடுத்து வரக்கூடிய பௌர்ணமி நாளிலும் இதேபோல பரிகாரத்தை நீங்கள் பின்பற்றலாம். நல்லதே நடக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.