- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண தேவைகள் பூர்த்தியடைய வழிபாடு

பண தேவைகள் பூர்த்தியடைய வழிபாடு

- Advertisement -

பணத்தால் வாங்க முடியாத பொருட்களே இல்லை என்று கூறலாம். அதனால் தான் பணம் பத்தும் செய்யும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அது முற்றிலும் உண்மையே. பணம் இருக்கும் இடத்தில் தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும். அதனால்தான் இன்றைய காலத்தில் பலரும் பணத்திற்கு பின்னாடி ஓடி கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஓடியும் ஒரு சிலரால் அந்த பணத்தை சம்பாதிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். அந்த சூழ்நிலையை சரி செய்வதற்கு மகாலட்சுமி தாயாரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும். செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார் என்பதால் அவளை வழிபட்டால்தான் செல்வ செழிப்பு உயரும். அப்படி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது ஒரே ஒரு பொருளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு வழிபாடு செய்ய நம்முடைய வேண்டுதலை மகாலட்சுமி தாயார் நிறைவேற்றுவார்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு உரிய கிழமையாக திகழ்வது வெள்ளிக்கிழமை தான். அதிலும் வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரை என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக திகழ்கிறது. ரேவதி நட்சத்திரம் சேர்ந்து வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று இந்த வழிபாட்டை செய்தோம் என்றால் மிகுந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய ஒரு பொருளை நம்முடைய கையில் வைத்துக்கொண்டு நாம் வழிபாடு செய்ய வேண்டும்.

மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்கள் பல இருந்தாலும் மகாலட்சுமி பிறந்த இடத்திலிருந்து தோன்றியதாக திகழக்கூடிய கல்லுப்பு. கல் உப்பு என்பது மகாலட்சுமிக்கு இணையான சக்திகளை கொண்டதாக திகழ்கிறது. அதனால் தான் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் கல் உப்பை வீட்டிற்கு வாங்கி வர மகாலட்சுமி வீட்டிற்குள் வருவாள் என்று கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல் உப்பை நம்முடைய இரண்டு கைகளிலும் வைத்து நன்றாக மூடிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு மகாலட்சுமியின் பீஜ மந்திரமான “ஓம் ஸ்ரீம் நம” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்த பிறகு இந்த கல் உப்பை நம்முடைய சமையலில் நம் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி ரேவதி நட்சத்திரம் வரும் வெள்ளிக்கிழமை அன்றோ அல்லது ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்றோ இந்த வழிபாட்டை செய்யும் பொழுது ஒரு வாரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.

பண வரவை அதிகரிப்பதற்குரிய வழிகள் கிடைக்கும். செல்வ செழிப்பு மேலோங்கும். வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் என்பது நிறைவாக நிறைந்திருக்கும். பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏழ்மை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே பணத் தேவையை பூர்த்தி செய்யும் பௌர்ணமி பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த சூட்சுமமான வழிபாட்டு முறையை பின்பற்றி மந்திரத்தை முழு மனதோடு கூறுபவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருளால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சற்று முன்