- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்டாய்லெட் சுத்தம் செய்ய இதோ ஒரு எளிய வீட்டு குறிப்பு

டாய்லெட் சுத்தம் செய்ய இதோ ஒரு எளிய வீட்டு குறிப்பு

- Advertisement -

உங்க டாய்லெட்டை இன்னும் கஷ்டப்பட்டு ஆசிட் ஊற்றி ஹேர்ப்பிக் ஊற்றி நெடியோடு சுத்தம் செய்து கொண்டிருக்கிறீர்களா. இதனால் மூக்கெரிச்சல், தொண்டை எரிச்சல் சுவாச பிரச்சனை என்ற பாதிப்புகள் உங்களுக்கு வருகிறதா. அதிலிருந்து தப்பதற்கு ஒரு எளிமையான வீட்டுக்குறிப்போடு உங்களை நோக்கி வந்திருக்கிறது இந்த குறிப்பு.

இந்த எளிமையான வீட்டு குறிப்பு தெரிந்து வைத்துக் கொண்டால், உங்கள் டாய்லெட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். சமையலறை சிங்கையும் எளிதாக சுத்தம் செய்யலாம். சமையலறை சிங்கில் இருக்கும் எச்சில் பாத்திரத்தையும் சுத்தமாக சுலபமாக சுத்தம் செய்யலாம். எல்லா விஷயத்திற்கும் சேர்த்து ஒரு சூப்பர் ஐடியா இது. உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பார்க்கலாம்.

- Advertisement -

டாய்லெட் சுத்தம் செய்ய எளிய வீட்டு குறிப்பு

இந்த குறிப்புக்கு முதலில் உங்களுக்கு தேவை கொட்டாங்குச்சி. ஒரு கொட்டாங்குச்சியை எடுத்து நெருப்பு மூட்டுங்கள். ஒரு கற்பூரம் வைத்து கொளுத்தினாளே, கொட்டாங்குச்சி தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிடும். அந்த சாம்பலை நன்றாக இடித்து நொறுக்கி, பவுடராக்கி தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். அந்த பவுடர் நைசாக அரைப்பட்டிருக்க வேண்டும். 1/4 லிட்டர் அளவுக்கு தண்ணீருக்கு 1/2 மூடி கொட்டாங்குச்சி சாம்பல் நமக்கு தேவை.

தண்ணீரில் கொட்டாங்குச்சி கறியை நன்றாக கலக்கவும். இதோடு விம் லிக்விட் 3 ஸ்பூன், உப்பு 2 ஸ்பூன், வினிகர் 1/4 கப் சேர்த்து நன்றாக கலந்தால், சூப்பரான ஒரு கருப்பு நிற லிக்விட் தயார். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு அந்த மூடியில், சின்ன சின்ன ஓட்டைகளை போட்டுக் கொள்ளுங்கள். சிங்க் நிறைய எச்சில் பாத்திரம் இருக்கிறது, அதன் மேலே இந்த லிக்விடை தெளித்தபடி ஊற்றங்கள். பிறகு ஒரு ஸ்பான்ஞ் நாரை வைத்து கடகடவென தேய்த்தால் போதும். அத்தனை பாத்திரங்களும் நிமிடத்தில் பளிச்சென மாறி இருக்கும்.

- Advertisement -

கறை படிந்த டாய்லெட்டுக்கு மேல் இந்த லிக்விடை ஊற்றுங்கள். எல்லா இடங்களிலும் படும்படி ஒரு பிரஷை வைத்து தேய்த்து விடுங்கள். 10 நிமிடங்கள் ஊறட்டும். பிறகு லேசாக பிரஷை போட்டு தேய்த்து கழுவி விடுங்கள். டாய்லெட் ஒரு நிமிடத்தில் சுத்தமாகிவிடும். இதே போல உங்களுடைய சிஙக் ஏரியாவையும் இதே லிக்விடை கொண்டு சுத்தம் செய்தால் நிமிடத்தில் பளிச் பளிச்சென மாறும்.

இந்த குறிப்புக்கு கட்டாயம் தேவைப்படக்கூடிய பொருள் அந்த கொட்டாங்குச்சியின் சாம்பல் தான். அதை மட்டும் தயார் செய்து தூள் செய்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது லிக்விட் ஆக மாற்றி சுத்தம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். கொட்டாங்குச்சியை நெருப்பு மூட்டி எடுத்த அந்த கருப்பு நிற கரிக்கு அத்தனை பவர் இருக்குது.

இதையும் படிக்கலாமே: ஆவணி முதல் வெள்ளி வழிபாடு

அழுக்கை சுத்தமாக சுலபமாக நீக்கிவிடும். உங்களுக்கு தேவை என்றால் இந்த எளிமையான வீட்டுக்குறிப்பை நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். அதிக பணம் கொடுத்து இனி கடையில் லிக்விட் வாங்கவே மாட்டீங்க.

சற்று முன்