- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆவணி முதல் வெள்ளி வழிபாடு

ஆவணி முதல் வெள்ளி வழிபாடு

- Advertisement -

நம்முடைய வழிப்பாட்டு தினங்களிலே முக்கியமாக கருதப்படுவது வெள்ளி செவ்வாய் தான். அதிலும் நம்முடைய வாழ்க்கையில் செல்வ நலனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனில் வெள்ளிக்கிழமை வழிபாடு மிகவும் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் வெள்ளிக்கிழமையானது செல்வாதிவாதிகளான மகாலட்சுமி தாயார் சுக்கிரன் போன்றோருக்கு உரிய நாளாக கருதப்படுவதால் தான். இத்தகைய அற்புதமான நாளில் நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழ நாம் செய்ய வேண்டிய ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

செல்வம் பெருக ஆவணி வெள்ளி வழிபாடு

நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எண்ணற்ற துன்பங்கள் உள்ளது. சிலருக்கு திருமண தடை, சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமை, இன்னும் பலருக்கோ வருமானம் போதாத குறை. நிலையான வேலை இல்லை உடல் நல கோளாறு இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு குறைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த குறைகள் எல்லாம் நீங்கி நிறைவாக வாழ நம்முடைய வழிபாடுகள் துணை நிற்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் பல்வேறு பூஜைகளும் வழிபாடுகளும் மந்திரங்களை ஜெபிக்கிறோம். அப்படியான ஒரு மந்திர வழிபாட்டு முறை தான் ஆவணி முதல் வெள்ளியில் நாம் செய்ய வேண்டியது. தமிழ் மாதங்களில் தமிழ் மாதங்களில் ஆவணி மாதம் ஆனது முக்கிய வழிபாட்டு மாதமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் முழு முதல் கடவுளான விநாயகர் சதுர்த்தி தொடங்கி அது முதல் பல வழிபாட்டு நாட்கள் வருகின்றது.

அப்படியான இந்த ஆவணி மாதத்தில் வரக்கூடிய முதல் வெள்ளியும் முக்கிய வழிபாட்டு தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் சொல்லக்கூடிய இந்த ஒரு மந்திரம் நம்முடைய வாழ்க்கையில் உள்ள சகல துன்பத்தையும் போக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்போது அந்த மந்திரத்தை எப்படி சொல்வது என்று பார்க்கலாம் இந்த மந்திரத்தை சொல்வதற்கான நேரம் மிக மிக முக்கியமானது. அதாவது நாளை காலை ஆறிலிருந்து ஏழு அல்லது இரவு 8 இருந்து 9 சுக்கிர போரையில் தான் இதை சொல்ல வேண்டும்.

- Advertisement -

இந்த இரண்டு நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அது எத்தனை தீபமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்போது தீபத்திற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். வடக்கு முகமாக அமர்ந்து கொள்வது சிறப்பு அதன் பிறகு மந்திரத்தை சொல்ல தொடங்குங்கள்.

ஓம் சக்தி ஓம்” என்ற இந்த மந்திரத்தை 333 முறை சொல்ல வேண்டும் இதுதான் கணக்கு. இந்த எண்ணிக்கையை நீங்கள் எப்படி மனதில் நிறுத்திக் கொள்ள முடியுமோ அதுபோல செய்து கொள்ளுங்கள். ஆனால் இத்தனை முறை நிச்சயம் சொல்ல வேண்டும் என்பது மட்டும் கட்டாயம். அதன் பிறகு உங்களுடைய அன்றாட பணிகளை துவங்கலாம். இந்த பூஜைக்கு என தனியாக எந்த ஒரு விதிமுறைகளும் வழிபாடுகளும் கிடையாது தீபத்திற்கு முன் அமர்ந்து சொல்ல வேண்டியது மட்டும் தான்.

இதையும் படிக்கலாமே:ஆவணி மாதம் தேய்பிறை பஞ்சமி வழிபாடு செய்யும் முறை

எந்த ஒரு செயலையும் நாம் நம்பிக்கை உடன் செய்யும்போது அதற்கான பலன் நிச்சயம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே இந்த மந்திர வழிபாடானது பிரபஞ்சத்திடம் நம்முடைய கோரிக்கையை கொண்டு சென்று நிறைவேற்றும் என்று சொல்லப்படுகிறது. இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினம் இந்த மந்திர வழிபாட்டை செய்து உங்களின் வாழ்க்கையில் உள்ள சகல துன்பத்தையும் போக்குவதற்கான வழியை தேடிக்கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

சற்று முன்