- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவரவேண்டிய பணம் வர பரிகாரம்

வரவேண்டிய பணம் வர பரிகாரம்

- Advertisement -

பலரும் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல வழிகளில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். அந்த முயற்சியில் அவர்களுக்கு முழுமையான பலன் கிடைக்குமா என்று கேட்டால் அனைவருக்கும் கிடைத்து விடாது. ஒரு சிலருக்கு அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பணம் வராமல் தடைப்பட்டு இருக்கும். இன்னும் சிலரோ உதவிக்காக கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள், வேலை செய்த இடத்திலிருந்து பணம் வராமல் இருக்கும், தொழிலில் ஏற்பட்ட லாபத்தை அனுபவிக்க முடியாத சூழ்நிலை என்று நமக்கு வரவேண்டிய பணம் வராமல் தடைப்பட்டு இருக்கும். அந்த தடையை உடைத்தெறிவதற்கு திருப்பதி ஏழுமலையானை நினைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வரவேண்டிய பணம் வர பரிகாரம்

பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்க வேண்டும் என்று பல வழிபாடுகளையும் பரிகாரங்களையும் நாம் செய்வது உண்டு. அது பணம் நமக்கு வருவதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் தடைகள் ஏற்படுவது. ஆனால் இந்த பதிவில் நமக்கு வரவேண்டிய பணம் வராமல் யாரிடமாவது இருக்கிறது என்றாலோ அதை எவ்வளவு முயற்சி செய்தாலும் பெற முடியவில்லை என்னும் சூழ்நிலையில் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அந்த பணம் நம்மை வந்து சேரும். அந்த பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்றோ அல்லது சனிக்கிழமை அன்றோ செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரு தங்க நாணயம் வேண்டும். அடுத்ததாக மஞ்சள் துணி வேண்டும். மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஜாக்கெட் துணியைக் கூட நாம் வாங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் பிள்ளையார் துண்டு என்று விற்கும் அந்த துண்டை வாங்கி அதை மஞ்சள் தடவி காய வைத்து உபயோகப்படுத்தலாம். இதில் வேற எந்த கலரும் சேர்ந்து இருக்கக் கூடாது. மஞ்சள் மட்டுமே இருக்க வேண்டும்.

அப்படி நாம் கடையிலிருந்து வாங்கி வந்த மஞ்சள் துணியை எக்காரணத்திற்கு கொண்டும் வெட்டக்கூடாது. எந்த அளவிற்கு நாம் வாங்கி வந்தோமோ அந்த துணியில் அப்படியே நாம் தங்க நாணயத்தை வைத்து முடிந்து வைக்க வேண்டும். வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு நாணயத்தை அந்த மஞ்சள் துணியில் வைத்து முடிய வேண்டும். அப்படி முடியும்போது திருப்பதி ஏழுமலையான் இடம் “எனக்கு வரவேண்டிய பணமானது வந்ததும் இந்த நாணயத்தை உனக்கு காணிக்கையாக செலுத்துகிறேன்” என்று வேண்டிக் கொண்டு அந்த முடிச்சை அப்படியே பெருமாளின் பாதத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு வரவேண்டிய பணம் எப்பொழுது வந்து சேருகிறதோ உடனே அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு போய் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து அவருடைய உண்டியலில் சேர்த்து விட வேண்டும். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்பவர்கள் கண்டிப்பான முறையில் அலமேலு மங்கையையும் தரிசனம் செய்ய வேண்டும். மேலும் யாருக்கு வரவேண்டிய பணம் வராமல் தடைப்பட்டிருக்கிறதோ அவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டுமே தவிர அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் செய்யக் கூடாது.

இதையும் படிக்கலாமே:குழந்தைகள் ஒழுக்கத்தையும் சிறப்பான கல்வி அறிவையும் பெற வழிபாடு

முழு நம்பிக்கையுடன் திருப்பதி ஏழுமலையானை நினைத்து இந்த ஒரு பரிகாரத்தை செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் ஏழுமலையானின் அருளால் வரவேண்டிய பணம் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்