ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையை நாம் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பெருமாளின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக வேண்டும். இவர்களின் அருள் இருந்தால்தான் நம்மால் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். அப்படி இவர்களின் அருளை பெறுவதற்கு இன்று இரவுக்குள் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
காக்கும் கடவுளாக திகழக்கூடியவர் பெருமாள். பெருமாளை மனதார நினைத்து வழிபாடு செய்தால் நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வமாகவும் இவர் திகழ்கிறார். இவரை வழிபடுவதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது பலரும் அறிந்த உண்மையே.
அப்படிப்பட்ட பெருமாளை ரோகிணி நட்சத்திரநாளில் வழிபாடு செய்ய வேண்டும். மாலை நேரத்தில் எப்பொழுதும் போல் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள். அன்றைய தினம் இரவு 7:30 மணிக்கு மேல் வீட்டு பூஜை அறையில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்திற்கு முன்பாக சுத்தமான ஒரு டம்ளரில் பசும்பாலோ அல்லது சுத்தமான தண்ணீரோ வைக்க வேண்டும்.
பிறகு பெருமாளை மனதார நினைத்துக் கொண்டு அந்த தீபத்தை இரண்டு நிமிடம் கண் இமைக்காமல் பார்க்க வேண்டும். இப்படி பார்க்கும் பொழுது “ஓம் நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும். இப்படி நாம் உச்சரித்து அந்த தீபத்தையே பார்க்கும் பொழுது அந்த தீபச்சுடர் ஒளியில் பெருமாளின் உருவம் நம் கண்ணிற்கு தோன்றும். இப்படி இரண்டு நிமிடம் வழிபாடு செய்து விட்டு அந்த தீபத்தை குளிர வைத்துவிட்டு நெய்வேத்தியமாக வைத்த பாலையோ தண்ணீரையோ வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அருந்த வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும், வீண் விரயங்கள் குறையும், பண வரவு அதிகரிக்கும், செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு அனைத்து விதமான செல்வ செழிப்பும் ஏற்பட்டு நலமுடன் வாழ முடியும். இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் இரண்டு நிமிடம் தீபத்தை கண் இமைக்காமல் பார்க்க வேண்டும் என்பதும் அதே நேரத்தில் பெருமாளின் நாமத்தை மனதார உச்சரித்து அந்த தீபத்தில் பெருமானின் உருவத்தை கொண்டு வந்து தரிசிக்க வேண்டும் என்பதும் தான்.
இதையும் படிக்கலாமே:கிரக தோஷங்கள் நீங்க சனிக்கிழமை பரிகாரம்
இந்த சூட்சுமமான வழிபாட்டை இன்று இரவு 7:30 மணிக்கு மேல் படுக்கச்செல்வதற்கு முன் யாரொருவர் செய்கிறார்களோ அவர்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தர வாசம் புரிவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.