- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபித்ரு தோஷத்தை நீக்கி செல்வ வளத்தை அதிகரிக்கும் ஆவணி ஞாயிறு வழிபாடு

பித்ரு தோஷத்தை நீக்கி செல்வ வளத்தை அதிகரிக்கும் ஆவணி ஞாயிறு வழிபாடு

- Advertisement -

ஆவணி மாதம் என்றாலே அது சூரிய பகவானுக்குரிய மாதமாக திகழ்கிறது. அதனால் சூரிய பகவானிற்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக இருக்கிறது. அன்றைய தினம் சூரிய பகவானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆவணி ஞாயிற்றுக்கிழமை நாம் எந்த முறையில் விநாயகப் பெருமானை வழிபட்டால் நமக்கு இருக்கக்கூடிய பித்ரு தோஷம் நீங்கும் என்றும் செல்வ செழிப்பு உயரும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆவணி ஞாயிறு வழிபாடு

சூரிய பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் மாதமாக திகழ்வதுதான் ஆவணி மாதம். அதனால் தான் ஆவணி மாதம் சூரிய பகவானுக்குரிய மாதமாக திகழ்கிறது. அந்த மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெறும். அப்படி கிடைப்பதன் மூலம் நாம் எதிர்பார்த்த வேலைகள் கிடைப்பதோடு, பதவி உயர்வு, சம்பள உயர்வு, அதிகார வேலை போன்ற அனைத்திலும் சிறந்து விளங்க முடியும். அப்படிப்பட்ட ஆவணி ஞாயிற்றுக்கிழமை விநாயகரை வழிபடும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

விநாயகர் என்பவர் கேதுக்குறியவராக திகழ்கிறார். சிவபெருமான் சூரிய பகவானுக்குரியவராக திகழ்கிறார். சூரியனும் கேதுவும் சேர்வதன் மூலமாக நமக்கு பலவிதங்களில் பாதிப்புகள் ஏற்படும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கடன்கள், குழந்தை பாக்கியம் இன்மை, பித்ரு தோஷம் போன்ற அனைத்தும் ஏற்படும். இவை அனைத்தையும் நீக்கி நலமுடன் வாழ்வதற்கு செய்யக்கூடிய ஒரு சூட்சமமான வழிபாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்தில் செய்ய வேண்டும். காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்து விட வேண்டும். அந்த நேரம் என்பது சூரிய கோரையாக திகழ்வதால் அந்த நேரத்தில் செய்வது தான் சிறப்பு. ஆலயத்திற்கு செல்லும் பொழுது 7 ஒற்றை சிவப்பு செம்பருத்தி பூக்களையும், அருகம்புல் மாலையையும் வாங்கிக்கொண்டு சென்று அந்த சிவாலயத்தில் இருக்கக்கூடிய விநாயகருக்கு கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இதில் அருகம்புல் என்பது கேதுவையும் செம்பருத்தி என்பது சூரியனையும் குறிக்கிறது. இந்த இரண்டு பொருட்களையும் ஒரு சேர விநாயகருக்கு கொடுத்து நாம் வழிபாடு செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் சூரிய கேதுவால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பித்ரு தோஷம் முற்றிலும் நீங்கும். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்ற அமாவாசை தினங்களில் முன்னோர்களை நாம் வழிபாடு செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுதும் நமக்கு பித்ரு தோஷம் என்பது ஏற்படாது. வம்சவிருத்தி ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:பணவரவு அதிகரிக்க தீப வழிபாடு
இப்படி ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிவாலயத்தில் இருக்கக்கூடிய விநாயகரை இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செல்வ செழிப்புடனும் நலமுடனும் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்