- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணவரவு அதிகரிக்க தீப வழிபாடு

பணவரவு அதிகரிக்க தீப வழிபாடு

- Advertisement -

பொதுவாகவே எந்த ஒரு காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் நாள் நட்சத்திரம் பார்த்து துவங்குவது நல்லது என்று சொல்லுவார்கள். இந்த நாள் நட்சத்திரம் பார்த்து செய்யும் எந்த ஒரு காரியமும் நிச்சயம் வெற்றியை பெற்றுத்த ரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்படி அமையக் கூடிய நாட்களை நாம் தவற விடக் கூடாது. அந்த வகையில் நாளைய தினம் முருகனுக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி உடன் மற்றும் ஒரு சிறப்பான நாளாகவும் திகழ்கிறது. அந்த நாளில் நாம் செய்யக் கூடிய ஒரு எளிய தீப வழிபாட்டு முறையைப் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செல்வம் பெருக தீப வழிபாடு

நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் செல்வ நிலை உயர வேண்டும் என்பது கட்டாயமான ஒன்று . ஏனெனில் ஒருவருடைய வாழ்க்கையை நல்ல முறையில் வாழ அடிப்படை தேவையே இந்த செல்வம் தான். செல்வம் என்றாலே நமக்கு முதலில் பணம் என்ற சொல் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அதுமட்டுமின்றி பணத்தை தவிர்த்தான மற்ற செல்வங்களும் நாளைய தினம் இந்த தீபம் ஏற்றும் போது நிச்சயம் நம்மை வந்து அடையும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

எத்தனை பெரிய செல்வ நலன்களை பெற்றுத் தரக்கூடிய நாளைய தினத்தில் என்ன சிறப்பு என்று உங்களுக்கு தோன்றலாம். முதலில் நாளைய தினம் முருகனுக்கு உகந்த தேய்பிறை சஷ்டி. இந்த நாளில் நாம் முருகரை வழிபடும் பொழுது நம்முடைய துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம். அத்துடன் நாளைய தினம் மூன்று நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து வருகிறது.

அதாவது நாளை அதிகாலையில் அஸ்வினி நட்சத்திரமும், இரவு வரை பரணி நட்சத்திரமும், அதற்குப் பிறகு கிருத்திகை நட்சத்திரமும் வருகிறது. இப்படி மூன்று நட்சத்திரங்களும் ஒரே நாளில் இணைந்து வருவது ஒரு அற்புதமான நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நாம் வீட்டில் ஏற்று கூடிய ஒரு தீபம் தான் நம்முடைய வீட்டின் செல்வநலனை பல மடங்கு உயர்த்தும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் என்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றும் நேரம் மிக மிக முக்கியம். நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணியிலான சுக்கிர ஹோரை நேரத்தில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். அது மட்டும் இன்றி மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரையிலான குரு ஓரை நேரத்திலும் நாம் ஒரு தெய்வம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நாளை காலையில் குளித்து முடித்து விட்டு ஆறு மணி அளவில் உங்கள் பூஜை அறையில் அகல்விளக்கில் ஒரே ஒரு தீபம் ஏற்றுங்கள். பூஜை அறையில் மற்ற தீபம் ஏற்றினாலும் தவறில்லை. ஆனால் ஒரு அகல் தீபம் நிச்சயமாக எரிய வேண்டும். இந்த தெய்வம் ஒரு மணி நேரம் தெரிய வேண்டும் தீபம் கிழக்கு முகமாக எரியட்டும் இந்த நேரத்தில் உங்களுடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும் வடக்கு நோக்கி அமர்ந்து வேண்டிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக மாலை 6 மணிக்கு இதே போல் பூஜை அறையில் அகல் தீபம் ஏற்ற வேண்டும். இப்போது தீபம் ஏற்றும் போது நல்லெண்ணெய்க்கு பதிலாக நெய் ஊற்றி ஏற்ற வேண்டும். இந்த இரண்டு தீபத்தையும் நாளைய தினம் ஏற்றும் பொழுது உங்களுடைய வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெற்று நல்ல முறையில் வாழ்வதற்கான யோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் நாளைய தினம் முருகப் பெருமானின் அருளையும் இந்த தீபம் நிச்சயம் பெற்று தரும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:முறையாக சம்பாதிக்காதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!
நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்களை போக்கிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பவர்கள் நாளைய மூன்று நட்சத்திரம் இணையும் இந்த அற்புதமான நாளை தவிர விடாதீர்கள். நம்பிக்கை உள்ளவர்களும் நம்பிக்கையுடன் இந்த தீப வழிபாட்டை செய்து பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

சற்று முன்