- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவு அதிகரிக்க நாளை குளிக்கும் போது சொல்ல வேண்டிய வார்த்தை

பண வரவு அதிகரிக்க நாளை குளிக்கும் போது சொல்ல வேண்டிய வார்த்தை

- Advertisement -

நாளைய தினம் திங்கட்கிழமையோடு கோகுல அஷ்டமி திதி சேர்ந்து வருகின்றது. கிருஷ்ணருக்கு உகந்த நாள் இது. கிருஷ்ண பரமாத்மாவின் பரிபூரண அருள் ஆசி கிடைத்ததால் தான், குசேலர் மிகப்பெரிய செல்வந்தராக மாறினார். அந்த கதை நாம் எல்லோருக்கும் தெரியும். இதன் அடிப்படையில் நாளைய தினம் நாம் செல்வந்தராக மாற வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்வது. ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நாளை வீட்டில் இருப்பவர்கள் எல்லோருமே இந்த பரிகாரத்தை செய்யலாம். அந்த கிருஷ்ண பரமாத்மாவின் பரிபூரண ஆசி கிடைக்கும். உங்கள் உடம்பை பிடித்த பீடை தரித்திரம் விலகும். செல்வ செழிப்பில் நீங்களும் உயர்ந்த நிலமைக்கு வர முடியும். பரிகாரத்திற்காக தேவைப்படக்கூடிய பொருட்கள் என்னென்ன என்று முதலில் பார்த்து விடுவோம். மூன்று இலைகள் உங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

முதலில் இருப்பது நெல்லி மரத்தின் இலை, இரண்டாவது வன்னி மரத்தின் இலை, மூன்றாவது வில்வ மரத்தின் இலை, நெல்லி மரத்தில் இருக்கும் இலைகள் தான் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த நெல்லி இலைகள் கிடைத்தால் பறித்து வீட்டுக்கு கொண்டு வந்து வைத்து விடுங்கள். அந்த இலையை குளிக்கின்ற தண்ணீரில் போட்டு விடுங்கள்.

நெல்லி மரத்து இலைகள் போட்ட தண்ணீரில் உங்கள் வலது ஆள்காட்டி விரலால் ‘ஓம் அனந்தாய நமஹ’ என்ற மந்திரத்தை எழுதி விடுங்கள். பிறகு ஓம் அனந்தாய நமஹ என்ற மந்திரத்தையே 11 முறை சொல்லிவிட்டு இந்த தண்ணீரில் நீங்கள் குளிக்க வேண்டும் அவ்வளவுதான். நெல்லி மரத்து இலை கிடைக்காத பட்சத்தில் வன்னி மர இலை, வில்வ இலைகளை பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம் தவறு கிடையாது. எங்களால் மூன்று இலைகளையும் சேகரிக்க முடியும் என்றால் மூன்று இலைகளையும் சிறிதளவு அந்த தண்ணீரில் போட்டு குளிப்பது நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -

நாளைய தினம் இந்த தண்ணீரில் வீட்டில் இருக்கும் குடும்ப தலைவி, குடும்ப தலைவன், பிள்ளைகள் எல்லோருமே குளியுங்கள். உங்களுக்கு அந்த கிருஷ்ண பரமாத்மாவின் ஆசி பரிபூரணமாக கிடைத்துவிடும். நாளை தினம் காலையில் இந்த குளியலை மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் மாலை 5 மணிக்கு மேல் இந்த தண்ணீரில் குளித்துவிட்டு கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. உங்கள் உடம்பை பிடித்த பீடை விலகும்.

முக்கியமாக பண வரவை உங்களிடம் வரவிடாமல் தடுக்கக்கூடிய, அந்த எதிர்மறை ஆற்றல் இருக்கிறது அல்லவா, அதை தடுக்கக்கூடிய சக்தி இந்த குளியலுக்கு இருக்கிறது. உங்களைப் பிடித்த வறுமை நோய் பிரச்சனைகள் எல்லாம் விலகும். வருமானம் அதிகரிக்கும். மனம் தெளிவு பெறும் வருமானத்தை ஈட்டி எடுக்க கூடிய யோகம் உங்களை தேடி வரும் வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும்.

இதையும் படிக்கலாமே: ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

நம்பிக்கையோடு செய்யுங்கள். அதன் பிறகு குளித்து முடித்துவிட்டு பூஜையறையில் வழக்கம் போல கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளைய தினம் மேல் சொன்னபடி குளியலை மேற்கொண்ட பிறகு உங்களுடைய உடம்பில் நீங்களே ஒரு வித்தியாசத்தை உணருவீர்கள். ஏதோ ஒரு கெட்ட சக்தி நம் உடம்பை விட்டு விலகிய படி தோன்றும், உடம்பும் மனதும் லேசாகும். எளிமையான இந்த பரிகாரத்தை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்