- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆவணி மாத தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் ஆவணி மாதத்தில் வந்திருக்கக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதி. நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தியும் இருக்கிறது. ஆகவே நாளை மாலை நீங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை முடித்துவிட்டு, பிறகு கோவிலுக்கு சென்று பைரவரை வழிபாடு செய்யலாம். நாளைய தினம் திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த தேய்பிறை அஷ்டமி திதி வழிபாட்டை யாரும் தவற விடாதிங்க.

நாளைய தினம் மாலை 7:30 மணிக்கு மேல் கோவிலுக்கு சென்றாலும் பைரவரை நீங்கள் தரிசனம் செய்யலாம். நாளை கட்டாயம் சிவன் கோவிலுக்கு சென்று பின் சொல்லக்கூடிய முறையில் பைரவரை வழிபாடு செய்தால் உங்கள் கடன் சுமையெல்லாம் படிப்படியாக குறைய தொடங்கி விடும்.

- Advertisement -

ஆவணி தேய்பிறை அஷ்டமி திதி வழிபாடு

ஆவணி மாதம் வந்திருக்கக் கூடிய இந்த தேய்பிறை அஷ்டமி திதிக்கு ஸ்தாணு அஷ்டமி என்று பெயர். நாளை 26-08-2024 மாலை பைரவர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடக்கும். அதில் கலந்து கொள்ளுங்கள். அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கவும். பூஜையில் அமர்ந்து அபிஷேகத்தை கண்குளிர பாருங்கள்.

2 மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சிகப்பு துணையின் 27 மிளகு வைத்து முடிந்து, அந்த முடிச்சை அகல் விளக்கில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி, அந்த சிகப்பு நிற துணியில் தீபம் ஏற்ற வேண்டும். நெருப்பு அந்த துணியில் பட்டு எரிந்து அந்த மிளகில் பட்டு எரிந்து, மிளகானது எப்படி படபடவென வெடித்து சிதறுகிறதோ, அதேபோல உங்களுடைய கடன் சுமையும் கண்ணுக்கு தெரியாமல் காணாமல் வெடித்து சிதறிவிடும் என்பது தான் இந்த விளக்கின் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

நாளை தினம் எல்லோரும் தவறாமல் சிவன் கோவிலுக்கு சென்று பைரவ சன்னிதானத்தில் இந்த விளக்கை போட்டு விடுங்கள். நாளை இந்த விளக்கை ஏற்றுபவர்களுக்கு கடன் சுமை நிச்சயம் குறையும். உங்கள் கையால் பைரவருக்கு செவ்வரளி பூக்களை வாங்கிக் கொடுப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. பிங்க் நிறத்தில் இருக்கும் அரளி பூக்களை விட, நாளைய தினம் செவ்வரளி பூ, அதாவது சிவப்பு நிறத்தில் இருக்கும் அரளிப்பூவை பைரவருக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே திங்கட்கிழமை ராகு காலத்தில் அல்லி மலரை பைரவருக்கு சாத்தி, புனுகு வாங்கி கொடுத்து, பாகற்காய் சாதம் நெய்வேதியம் வைத்தால் கண்டக சன்னியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும் என்பது ஒரு பரிகாரம். நாளைய தினம் தேய்பிறை அஷ்டமி திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது நாளைய தினம் சனி பகவானால் தாக்கம் இருப்பவர்கள் இந்த வழிபாட்டையும் செய்து பலன் பெறலாம்.

- Advertisement -

இது எதுவுமே எங்களால் கடைபிடிக்க முடியாது. எங்களுக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. எங்களுக்கும் பைரவரின் ஆசி கிடைக்க வேண்டும் நாங்கள் என்ன செய்வது. ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கோங்க. ‘ஸ்ரீ பைரவர் போற்றி போற்றி’ என்ற இந்த மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டே அந்த பிஸ்கட்டுகளை பைரவரின் வாகனமான நாய்களுக்கு சாப்பிட போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 26-08-2024-888 மேஜிக் டே பரிகாரம்

நீங்கள் போட்ட பிஸ்கட்டைகளை நாய்கள் வந்து பசியாற சாப்பிட்டு விட்டால் உங்கள் கடன் சுமை தீருவதற்கு உண்டான வழியை பைரவர் காட்டிவிட்டார் என்பது அர்த்தம். நாளைய தினம் பைரவரின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்