இன்று 888 மேஜிக்கல் டே. 26.8.2024 இதில் 26 என்ற எண்ணை கூட்டினால் கூட்டுத்தொகை எட்டு வரும். எட்டாவது மாதம். 2024 எண்களை கூட்டினால் 8 வரும். அதோடு மட்டுமல்லாமல் இன்று திதிகளில் எட்டாவது திதியான அஷ்டமி திதியும் சேர்ந்து இருக்கிறது. ஆகவே இந்த நாளை அதிசயமான நாள் என்று சொல்கிறார்கள்.
இந்த மேஜிக்கல் டேவில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் நமக்கு பெரிய அளவில் பலனை கொடுக்கும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று பண வசியம் ஏற்பட ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தையும், இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்த போகும் மந்திரத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பண வசிய மந்திரம்
உங்களுக்கு எப்போதெல்லாம் பணத் தேவைப்படுகிறது அப்போதெல்லாம் இந்த மந்திரத்தைச் சொல்லும் போது, தேவைக்கான பணத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும். தினம் தினம் இந்த மந்திரத்தை சொன்னாலும், தினம் தினம் உங்களுக்கு வருமானம் பெருகிக்கொண்டே செல்லும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
அந்த மந்திரத்தை குறிப்பிட்ட இந்த மேஜிக்கல் நாளில் நாம் 8 முறை எழுதும்போது இன்னும் அபரிவிதமான பலனை பெற முடியும். ஒரு சிலருக்கு ஒரு சில பண தேவை இருக்கும். அந்த பணத் தேவைக்காக நீங்கள் முயற்சி செய்து கொண்டும் இருக்கலாம். அடுத்தவர்களிடம் கடன் கேட்டிருக்கலாம், அல்லது வங்கியில் லோன் அப்ளை செய்திருக்கலாம், இப்படி ஏதாவது ஒரு பணத் தேவை ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று இருக்கத்தான் செய்கிறது.
தங்களுடைய பிள்ளைகளை படிக்க வேண்டும், சொந்த வீடு கட்ட வேண்டும் அல்லது மகளின் திருமணத்திற்காக நகை சேர்க்க வேண்டும், கொடுத்த பணம் திரும்பி வரவில்லை இப்படி நிறைய பிரச்சனைகளில் நீங்கள் சிக்கி இருக்கலாம். இந்த பண பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும்.
உங்களுக்கான பணம் உங்கள் கையை வந்து அடைய வேண்டும் என்றால் இந்த தாந்திரீக பரிகாரம் முழுக்க முழுக்க உங்களுக்காக மட்டும் தான். நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை 8 முறை எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நல்லதை கொண்டு வந்து சேர்க்கும்.
‘ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம்’ இதுதான் மந்திரம். ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த காகிதத்திற்கு நான்கு பக்கத்திலும் மஞ்சள் தடவி விடுங்கள். எதுவாக இருந்தாலும் குருபகவானின் ஆசியோடு மங்களகரத்தோடு தொடங்குவோம். ஒரு பச்சை நிற பேனாவோ அல்லது நீல நிற பேனாவிலோ இந்த மந்திரத்தை 8 முறை எழுதுங்கள்.
உங்களுக்கு என்ன பண தேவை இருக்கிறதோ, அந்த பணத்தேவையை ஒரு வரியில் இந்த காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள். இந்த காகிதத்திற்கு நடுவே 8 ஏலக்காய்களை வைத்து பேப்பரை மடித்து அப்படியே பூஜை அறையிலோ, பூஜையறையில் அலமாரியிலோ அல்லது ஏதாவது உங்கள் இஷ்ட தெய்வ சுவாமி படத்திற்கு பின் பக்கமோ வைத்து விடுங்கள்.
இவ்வளவுதான் பரிகாரம். இன்று 08:08 மணிக்கு இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய தொடங்க வேண்டும். ஐந்து அல்லது ஏழு நிமிடத்தில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து முடித்து விடலாம். இந்த காகிதத்தை சிறிது நேரம் கையில் வைத்துக்கொண்டு பிரபஞ்சத்திடம் மனதார நீங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்று நேர்மறையோடு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் பரிகார முடிந்தது.
இதையும் படிக்கலாமே: கோகுல அஷ்டமி வழிபாட்டில் வைக்க வேண்டிய முக்கியமான பொருள்
இது ஒரு எளிமையான சூட்சம பரிகாரம். இதற்கு பின்னால் இது நடக்குமா நடக்காதா என்ற சிந்தனை எல்லாம் வேண்டாம். ஒரே ஒரு நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நல்லது நடந்தால் உங்களுக்கு சந்தோஷம், எதுவும் நடக்கவில்லை என்றால் நஷ்டம் அடைவதற்கு எதுவுமே இல்லை. இது ஒரு சிறு முயற்சி நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதை பின்பற்றி பலன் பெறவும்.