ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு மாதிரி பிரச்சனைகள், ஒவ்வொரு மாதிரியான போராட்டங்கள் இருக்கிறது. அந்த பிரச்சனைகளுக்கு போராட்டங்களுக்கு குழப்பத்திற்கு, என்ன விடை இருக்கிறது என்று தெரியாமல் நம்மில் பல பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். குழப்பத்திற்கு உண்டான தெளிவு கிடைத்தால் தானே, வாழ்க்கையில் முன்னேற முடியும்.
உங்களுடைய வாழ்க்கையிலும் இப்படி பதில் தெரியாத ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா. அந்த பிரச்சனைகளுக்கு உண்டான பதிலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா. இந்த அற்புதம் வாய்ந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்காக தான். உங்களுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனை இருந்தாலும் சரி அது சரியாக வேண்டும், அந்த குழப்பத்திற்கு விடை தெரிய வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் ஒரே இரவில் உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அந்த பரிகாரத்தை எப்படி செய்வது உச்சரிக்க வேண்டிய மந்திர வார்த்தை என்ன பதிவை தொடர்ந்து படிக்க தெரிந்து கொள்வோமா.
குழப்பத்திற்கான தீர்வு தரும் மந்திரம்
இரவு தூங்கச் செல்லும்போது இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும். உறங்க செல்வதற்கு முன்பு கை கால் முகத்தை ஒரு முறை கழுவி கொள்ளுங்கள். குலதெய்வத்தை நன்றாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எல்லா வேலையும் முடித்துவிட்டு, படுக்கையில் உறங்க செல்லும்போது படுக்கையிலேயே அமர்ந்து கொள்ளுங்கள். மனதை ஐந்து நிமிடம் ஒரு நிலைப்படுத்துங்கள்.
எந்த படபடப்பும் இருக்கக் கூடாது. உங்களுடைய பிரச்சனை எதுவோ, அந்த பிரச்சனையை மட்டும் நினைவுக்கு கொண்டு வந்து, அந்த பிரச்சனைக்கு உண்டான தீர்வை கொடு கடவுளே என்று வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு இந்த மந்திர வார்த்தையை 11 முறை சொல்ல வேண்டும். ‘ஓம் ஸ்வப்னேஷ்வரி தர்ஷய ஓம்’ ஒரே ஒரு மந்திர வார்த்தை தான்.
இந்த மந்திரத்தை 11 முறை வாய்விட்டு சொன்னாலும் சரி அல்லது மனதிற்குள் சொன்னாலும் சரி அல்லது ஒரு பேப்பர் பேனாவை எடுத்து 11 முறை எழுதினாலும் சரி மனதை ஒருநிலைப்படுத்தி, மனதை அலைபாய விடாமல் இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு உங்கள் பிரச்சனைக்கு நாளை காலைக்குள் தீர்வு கிடைத்துவிடும் என்று நினைத்து அப்படியே படுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் பரிகாரம். இந்த மந்திரத்தை உச்சரித்தந்தன் பலன், அந்த கடவுள் உங்களுக்கு இரவு கனவிலேயே நல்ல பதிலை சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஒருநாள் இந்த பரிகாரத்தை செய்து பார்த்து எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அப்படியே விட்டுவிட கூடாது. தினமும் தூங்க செல்லும் போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நிச்சயம் ஒரு நாள் உங்களுடைய குழப்பங்களுக்கு உண்டான தீர்வை அந்த கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் வெளிப்படுத்துவான்.
மனித ரூபத்தில் கடவுள் வந்து கூட உங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்லலாம். மந்திரத்தை சொல்லிவிட்டு பிரச்சினைக்கு உண்டான தீர்வினை எதிர்பார்த்துக் கொண்டே இருங்கள் நிச்சயம் ஏமாற்றம் இருக்காது. எத்தனை நாள் இந்த மந்திரத்தை சொல்வது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தால் பரவாயில்லை, பிரச்சனைக்கு தீர்வே கிடைக்கவில்லை, மந்திரத்தை மட்டும் தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் என்றால், பதினோரு நாள் முயற்சி செய்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: கொடிய நோயை நீக்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம்
உங்களுடைய பிரச்சனையை பொறுத்து நிச்சயமாக அந்த 11 நாட்களுக்குள் நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும். சில பேருக்கு இந்த மந்திரத்தை உச்சரித்த ஒரே நாளில் கூட நல்ல பலன்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழு நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் இல்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.