நீண்ட நாட்களாக நோய் நொடியால் அவதிப்பட்டு வருபவர்கள், நீண்ட நாட்களாக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், எல்லாம் உங்களுடைய மருத்துவத்துவத்துடன் சேர்த்து, இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள். சீக்கிரம் உங்களுடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும். நோயின் வீரியம் சீக்கிரம் குறையும்.
மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய அளவு படிப்படியாக குறையும். ஒரு காலகட்டத்தில் நீங்கள் முழுமையான ஆரோக்கியத்தை பெற இந்த மந்திரம் நிச்சயம் கை கொடுக்கும். பொதுவாகவே மற்ற தெய்வங்களுக்கு எல்லாம் 21 நாள் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும், 48 நாள் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். குறைந்தபட்சம் என்ன வழிபாடாக இருந்தாலும் மூன்று நாட்களாவது அந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.
ஆனால் இந்த நரசிம்ம மூர்த்திக்கு மட்டும் அப்படியெல்லாம் கிடையாது. நின்ற இடத்தில் இருந்து நீங்கள் நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்தால், அப்போதே அவர் கூப்பிட்ட குரலுக்கு வந்து ஆசி வழங்கி வரங்களை தரக்கூடிய வல்லமை கொண்டவர் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதன் அடிப்படையில் தினமும் காலையில் எழுந்து லட்சுமி நரசிம்மரை மனதார நினைத்து நீங்கள் சொல்ல வேண்டிய ஒரு ருண விமோசன மந்திரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ருணம் என்பது நோயை குறிக்கக்கூடிய ஒரு வார்த்தை. உங்களுடைய நோய்நொடி விலக வேண்டும் என்று லட்சுமி நரசிம்மரை சரணாகதி அடைந்து தினமும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நோய் நொடியை தீர்க்க நீங்கள் சொல்ல வேண்டிய லட்சுமி நரசிம்மர் மந்திரம் இதோ உங்களுக்காக.
நோய் தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம்
ஸிம்ம முகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணா மூர்த்திம்|
ஸர்வ வ்யாபிதம் லோக ரக்ஷகாம்
பாப விமோசனம் துரித நிவாரணம்
லக்ஷ்மி கடாக்ஷம் ஸர்வா பீஷ்டம்
அநேகம் தேஹி ஸ்ரீ லக்ஷ்மி நர்சிம்ஹோ
காலையில் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் பெருமாள் முன்பு, ஒரு நாளைக்கு ஒருமுறை இந்த மந்திரத்தை படித்தாலும் போதும். நம்பிக்கையோடு மந்திரத்தை படிப்பவர்களுக்கு நிச்சயம் அந்த லக்ஷ்மி நரசிம்மர் ஆசீர்வாதம் கிடைக்கும். நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டவர்கள் நிச்சயம் அதிலிருந்து விடுபடுவதற்கு உண்டான விமோசனம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: பண வரவை தரும் மகாலட்சுமியின் மூல மந்திரம்
நீண்ட நாள் பட்ட வியாதிகளை குணமாக இன்னொரு பரிகாரமும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. மாதம் தோறும் அனுஷ நட்சத்திரம் வரும் அல்லவா, அந்த நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு மாம்பழச் சாறை கொண்டு போய் கொடுக்க வேண்டும். அந்த மாம்பழச் சாறை அனுஷ நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால், நீண்ட நாள் வியாதி நீங்கும் என்பதும் ஒரு நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன இந்த இரண்டு ஆன்மீகம் வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி பலன் பெறவும்.