நாளைய தினம் சனி மகா பிரதோஷம். இந்த ஆகஸ்ட் மாதத்தில் 31ஆம் தேதி, இந்த அதி அற்புதம் வாய்ந்த பிரதோஷ நாள் வந்திருக்கிறது. நம்முடைய வாழ்நாள் துன்பம், தொலைந்து போக வேண்டும் என்று இந்த எளிமையான பரிகாரத்தை நாளைய தினம் செய்து பாருங்கள். நாள்பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் எல்லாம் உங்கள் மனதை விட்டு நீங்கிவிடும்.
நிறைய பேர் மனதில் ஆறாத காயங்கள் நிறைய இருக்கிறது. தனக்கு வாய்த்த வாழ்க்கை சரியில்லை, கணவன் சரியில்லை, மனைவி சரியில்லை, பிள்ளைகளுடைய போக்கு சரியில்லை, குடும்பத்தில் நிம்மதி இல்லை, குடும்பத்தில் நோய் நொடி பிரச்சனை, இப்படி எவ்வளவோ கஷ்டங்கள் மனிதர்களுடைய மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இதில் ஏதாவது ஒரு பிரச்சனை நீங்கி, ஒரு நாள் நிம்மதியாக தூங்க மாட்டோமா என்று நினைப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். உங்களுடைய பிரச்சனையை தீர்த்து வைக்க போகும் பரிகாரம் இதுதான் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
கஷ்டம் தீர வாழைப்பழ பரிகாரம்
நாளை சனி மகா பிரதோஷம். பிரதோஷ நேரம் ஆனது நாளை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை இருக்கிறது. நீங்கள் கோவிலில் சென்று உங்கள் வழிபாட்டை செய்தாலும் சரி, வீட்டில் இருந்து சிவ வழிபாட்டை செய்தாலும் சரி, உங்கள் கையில் நான்கு மஞ்சள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த வாழைப்பழத்தை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு உங்களுக்கு இருக்கும் கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட கஷ்டம், உங்களுடைய பிரச்சனையின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அந்த கஷ்டத்தை சொல்லி சிவபெருமானிடம் நந்தி தேவரிடம் மனம் உருகி வேண்டுங்கள். பிரார்த்தனை செய்துவிட்டு கையில் இருக்கும் வாழைப்பழத்தை கொண்டு போய் ஒரு பசு மாட்டிற்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர சனி மகா பிரதோஷ வழிபாடு
நான்கு பசுமாடு இருக்கு, நான்கு பசு மாட்டிற்கும் ஒவ்வொரு வாழைப்பழம் கொடுத்தாலும் சரிதான். கையில் இந்த மஞ்சள் வாழைப்பழத்தை வைத்து வேண்டி நாளைய தினம் பசுமாட்டிற்கு கொடுப்பவருக்கு நிச்சயம் தீரா துன்பம் தீரும் என்பது அந்த நந்தி பகவானின் வாக்கு. நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் இந்த வேண்டுதலை வைத்து பிரதோஷ நேரம் முடிவதற்குள்ளாகவே இதை நீங்கள் பசு மாட்டிற்கு கொடுத்து விட வேண்டும். இதுவும் சிவபெருமானின் வாக்கு. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.