- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனி மகா பிரதோஷம் நிலை வாசல் பரிகாரம்

சனி மகா பிரதோஷம் நிலை வாசல் பரிகாரம்

- Advertisement -

இந்த ஆகஸ்ட் மாதத்தின் கடைசி நாளான இன்று, சனி மகா பிரதோஷம் ஆனது வந்திருக்கின்றது. மாதம் தோறும் தான் பணத்திற்கு தட்டுப்பாடு, மாதம் தோறும் தான் வீட்டில் வறுமை இருக்கிறது, தினம் தினம் கஷ்டப்படுகின்றோம், ஆனாலும் கடன் சுமையிலிருந்து வெளிவர முடியவில்லை, இப்படி நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கும் குடும்பத்திற்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் நிச்சயம் ஒரு தீரீவினை கொடுக்கும் என்று நம்பி இந்த பதிவினை படிக்கலாம்.

காரணம் குபேரருக்கே ஐஸ்வர்யத்தை கொடுத்தது இந்த ஐஸ்வரியேஸ்வரர் நமக்கும் கொஞ்சம் கருணை காட்ட மாட்டாரா. ஈசனுக்கு சொந்தமான சனி மகா பிரதோஷ நாளில் நாம் செய்யக்கூடிய இந்த பரிகாரம் உங்களுடைய வறுமையை நீக்கும். கடன் சுமையை குறைக்கும். செல்வ செழிப்பை அதிகரிக்க செய்யும். முயற்சி செய்துதான் பாருங்களேன்.

- Advertisement -

இதற்காக நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்போவது கிடையாது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இன்று மாலை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் ஆலயங்களுக்கு சென்று சிவபெருமானி தரிசனம் செய்ய வேண்டும். இன்று மாலை 4:30 முப்பது மணியிலிருந்து 6:30 மணிரை பிரதோஷ நேரம். இந்த நேரத்தில் நீங்கள் கோவிலில் அமர்ந்து சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

கோவிலில் கூட்ட நெரிசல் இல்லாத இடத்தில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்யலாம். கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ள வேண்டாம். கூட்டம் கொஞ்சம் குறையட்டும். பிறகு சிவபெருமானை கண்குளிர பார்த்துவிட்டு, சிவபெருமானுக்கு மாலையாக போட்ட வில்வ இலைகளை மட்டும் பிரசாதமாக கேட்டு வாங்கிக்கோங்க.

- Advertisement -

பக்தர்கள் அனைவரும் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் வேண்டும் என்பதற்காக நிறைய வில்வ இலைகளை கொண்டு வந்து சிவபெருமானுக்கு இன்னைக்கு கொடுப்பாங்க. சிவபெருமாள் மேல் விழுந்த வில்வ இலைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். கட்டாயம் கோவிலில் குருக்கள் இதை கொடுப்பார். தரமாட்டேன் என்று சொல்லவே மாட்டாங்க.

திருநீறு உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இந்த இரண்டு பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரவும். ஒரு வெள்ளைத் துணியில் வாங்கிய வில்வ இலை, இந்த விபூதியை வைத்து சின்ன முடிச்சாக கட்டி சிவபெருமானை நினைத்து நிலை வாசலில் இதை மாட்டி விடுங்கள். அவ்வளவுதான் இன்று மாலை கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்த உடனேயே இந்த பரிகாரத்தை நீங்கள் செய்துவிடலாம்.

- Advertisement -

வீட்டில் இருந்து நிலை வாசலை தாண்டி தினம் தினம் வெளியில் செல்லும்போதும் உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கும். வெளியிலிருந்து வீட்டுக்குள் நீங்கள் நுழையும்போதும், உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கும். உங்கள் உடம்பில் இருக்கும் நெகடிவ் எனர்ஜியை எல்லாம், உச்சந்தலையின் வழியாக, நிலை வாசலில் கட்டி தொங்க விட்டிருக்கும் அந்த முடிச்சானது தன்னகத்தை ஈர்த்துக் கொண்டு கொள்ளும்.

சிவபெருமானின் அருள் ஆசியை உங்கள் வீட்டிற்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கக்கூடிய சக்தி இந்த முடிச்சுக்கோ உள்ளே இருக்கும் பொருட்களுக்கு உண்டு. எத்தனை நாள் ஆனாலும் அதனுடைய மகத்துவம் மாறாது. இந்த முடிச்சை எப்போது மாற்றுவது. அடுத்த முறை, அடுத்த மாதமோ அல்லது 15 நாட்கள் கழித்து வரும் பிரதோஷ நாளிலோ கோவிலுக்கு செல்லுங்கள்.

மீண்டும் சிவபெருமானது பிரசாதத்தை வாங்கி வந்து பழைய முடிச்சுக்கு உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதுசாக வாங்கி வந்த பிரசாதத்தை வைத்து முடித்து போட்டு நிலை வாசலில் கட்டலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர அரிசி மாவு விளக்கு பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் குறைகிறது என்பதை நீங்கள் உணர்ந்தால், இந்த பரிகாரம் முழுக்க முழுக்க உங்களுக்கானது. மாதம்தோறும் வரும் இரண்டு பிரதோஷ திதியையும் நீங்கள் தவற விடாதீங்க. ஈசனின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்க பிரார்த்தனை வைத்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்