நிறைய பேருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நிறைய உழைப்பார்கள். சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைப்பார்கள். கடைசியில் சேர்த்து வைத்த பணத்தை வீண் விரைய செலவு செய்வார்கள். மருத்துவமனைக்கோ அல்லது யாரிடமாவது கொடுத்து ஏமாந்து விடுவார்கள்.
இப்படி வீடு கட்ட பணம் சேர்த்து சேர்த்து நீங்கள் தோற்றுப் போயிருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம், அல்லது வீடு கட்ட பணமே சேர்க்க முடியவில்லை. முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைகிறது என்றாலும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.
சொந்த வீடு கட்ட பரிகாரம்
வீடு கட்ட வேண்டும் என்றால் செவ்வாய் பகவன் ஆசீர்வாதமும், சந்திர பகவானின் ஆசிர்வாதமும் நமக்கு தேவை. இந்த இரண்டு பேருடைய ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு உகந்த இந்த இரண்டு பொருட்களை எறும்புகளுக்கு அன்னதானமாக போட வேண்டும். செவ்வாய் பகவானுக்கு உரிய இனிப்பு பொருள் கற்கண்டு.
சந்திர பகவானுக்கு உரிய தானியம் பச்சரிசி. இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு அந்த கோவிலில் இருக்கும் மரத்தடியில் இந்த கற்கண்டு அரிசி சேர்த்து அரைத்த பொருட்களை தூவி விட வேண்டும்.
உங்களால் முடிந்தால் 1 கிலோ கற்கண்டு, 1 கிலோ பச்சரிசி வாங்கி சிவன் கோவிலில் இருக்கும் மடத்திற்கு தானமாக கொடுப்பதும் சிறப்பான பலனை கொடுக்கும். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இந்த இரண்டு பரிகாரங்களையும் இடை விடாமல் செய்து வந்து கொண்டே இருந்தால் வீடு கட்ட சீக்கிரம் பணம் சேர்த்து விடுவீர்கள்.
நல்ல வீடு வாங்கவோ, நல்ல நிலம் வாங்கவோ கடவுள் உங்களுக்கு அனுகிரகத்தை கொடுத்து விடுவான். ஜோதிட ரீதியாக இந்த பரிகாரம் ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்த பரிகாரம். சொல்லுவதற்கும் செய்வதற்கும் எளிமையாக இருந்தாலும் உங்களுடைய கஷ்டங்களை போக்குவதில் இது மிகச்சிறந்த பரிகாரமாக இருக்கும்.
சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் நீங்கள் தொடர்ந்து வழிபாடு செய்ய வேண்டிய கடவுள் முருகப்பெருமான்தான். ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தானங்களை நீங்கள் செய்து வந்தாலும் செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபாடு செய்யும் பழக்கத்தை நிறுத்தக்கூடாது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர பணவரவு அதிகரிக்க பரிகாரம்
செவ்வாய்க்கிழமை என்றால் உங்கள் நினைவுக்கு வருவது முருகனாகத்தான் இருக்க வேண்டும். வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று இரண்டு விளக்கு போட்டு, செவ்வரளி பூக்களை வாங்கிக் கொண்டு அந்த முருகன் சன்னிதானத்தை 6 முறை வளம் வாருங்கள். அவ்வளவுதான் நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.