- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர பணவரவு அதிகரிக்க பரிகாரம்

கடன் தீர பணவரவு அதிகரிக்க பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. பணம் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கை நிம்மதிகரமான ஒன்றாக இருக்கும். இதே பணவரவு அவர்களுடைய தேவைக்கு குறைவாக கிடைக்கும் பொழுது அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். அந்த பிரச்சனைகளிலிருந்து வெளியே வருவதற்காக கடன் என்னும் பெரிய புதை குழியில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் கடனை வாங்கும் பொழுது எளிதில் வெளியே வந்துவிடலாம் என்று நினைப்போம். ஆனால் ஒவ்வொரு முறையும் கடனை வாங்கும் பொழுது புதைக் குழிக்குள் மூழ்குவது போல மூழ்கிக் கொண்டே சென்று விடுவோம். இதிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால் அவர்களுடைய கடன் பிரச்சினையும் நீங்கும். அந்த கடன் பிரச்சினை நீங்குவதற்குரிய பண வரவும் உண்டாகும். அப்படிப்பட்ட பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கடன் தீர பணவரவு அதிகரிக்க பரிகாரம்

கடன் பிரச்சினை தீருவதற்கு முதலில் பரிகாரத்தை பார்ப்போம். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை. இந்த மூன்று கிழமையில் ஏதாவது ஒரு கிழமை செய்ய வேண்டும். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய பொருட்கள் என்று பார்த்தால் அது கற்றாழை மற்றும் கல் உப்புதான். கற்றாழையில் அதிக அளவு நேர்மறை ஆற்றல்கள் இருக்கிறது. இந்த நேர்மறை ஆற்றல்களை பயன்படுத்தி நாம் பரிகாரம் செய்யும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் என்னும் எதிர்மறை ஆற்றல் முற்றிலும் நீந்துவிடும். இதே போல் தான் கல் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய ஒன்றாகவும் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது.

இப்பொழுது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம். இதற்கு வீட்டில் வளர்க்கக்கூடிய கற்றாழை செடிகளில் உள்ளிருக்கும் கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் அளவிற்கு தேவைப்படும். அதேபோல் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு தேவைப்படும். ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை உங்களுடைய இடது கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் கற்றாழை ஜெல்லை எடுத்து அந்த கல்லுப்பின் மேல் வைத்து விடுங்கள். இப்பொழுது உங்களுடைய கையை நன்றாக அழுத்தமாக மூடி கொள்ளுங்கள். பிறகு இதை வைத்து உங்களுடைய தலையை இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்ற வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக இப்படி சுற்றி முடித்த பிறகு இதை அப்படியே ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை வைத்து அதில் கரைத்து விடவும். இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக் கூடிய கடன் பிரச்சனை என்பது படிப்படியாக குறைவதை நம்மால் உணர முடியும். நாம் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்குரிய முயற்சிகளை எடுத்துக் கொண்டே இந்த பரிகாரத்தையும் செய்யும் பொழுது விரைவிலேயே நம்முடைய கடன் பிரச்சினை தீரும். அடுத்ததாக நம்முடைய வேலை மற்றும் தொழிலின் மூலம் பணவரவை அதிகரிப்பதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது நமக்கு பணம் ரீதியாக என்னென்ன தேவைகள் இருக்கிறது அந்த தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும் என்றும் பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு நாம் மேற்கொண்டு முயற்சிகள் வெற்றி அடையும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு நமக்கு தேவைப்படுவது கற்கண்டு மட்டும்தான். இந்த பரிகாரத்தை எப்பொழுதெல்லாம் நாம் பணத்தை சம்பாதிப்பதற்கான முயற்சிகளை செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் செய்யலாம். நேரம், காலம் என்று எதுவும் கிடையாது.

- Advertisement -

ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரே ஒரு டைமண்ட் சர்க்கரையை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். காலையில் எப்படி இருந்தாலும் பணத்தை சம்பாதிப்பதற்கு வெளியே செல்வோம் அல்லவா? அதற்கு முன்பாக இந்த முடிச்சை மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அந்த முடிச்சை உங்களுடைய கையில் வைத்துக்கொண்டு “சுக்கிர பகவானே, மகாலஷ்மி தாயாரே பணத்தை சம்பாதிப்பதற்காக நான் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும், அதில் எந்தவித தடைகளும் வரக்கூடாது” என்று மனதார வேண்டிக்கொண்டு அந்த முடிச்சை உங்களுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் முழுவதும் அது உங்களுடனே இருக்கட்டும். மாலை நேரத்தில் வீடு திரும்புவோம் அல்லவா? அப்பொழுது அந்த முடிச்சில் இருக்கக்கூடிய கற்கண்டை எடுத்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய செடிகளின் அடியிலோ அல்லது கால் படாத இடத்திலோ போட்டு விடுங்கள். இப்படி தினமும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:வேண்டிய பணத்தை தரும் பரிகாரம்

இந்த எளிமையான இரண்டு தாந்திரீக பரிகாரத்தையும் முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு பணவரவு அதிகரிப்பதோடு கடன் என்னும் பிரச்சினை காணாமல் போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்