கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க, ஒரு பரிகாரம் அல்ல, இரண்டு சக்தி வாய்ந்த பரிகாரங்களை இன்று நாம் பார்க்கப் போகின்றோம். ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை. தினமும் நம்பிக்கையோடு ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து பின் சொல்ல கூடிய மந்திரத்தை சொல்லி பூமியில் ஊற்றுங்கள்.
திங்கட்கிழமை, வியாழக்கிழமை துர்க்கை அம்மன் சன்னிதானத்தில் நின்று கொண்டு எனக்கு வேலையை நீதான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்கப் போறீங்க. அவ்வளவுதான் இந்த இரண்டு பரிகாரத்தை முறையாக எப்படி செய்வது, தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன விரிவான தகவலை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ள போ கின்றோம்.
வேலை கிடைக்க துர்க்கை வழிபாடு
தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து விட வேண்டும். செம்பு பாத்திரம் தேவை. உங்க வீட்டு பூஜை அறையில் இருக்கும் பஞ்ச பாத்திரத்தை பயன்படுத்தினாலும் சரி தான். அது நிரம்ப சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொண்டு, சிவப்பு நிற ரோஜா இதழ்களையோ அல்லது வேறு ஏதாவது சிவப்பு பூக்களையும் அதில் போட்டு அந்த தண்ணீரை பூமியில் உற்ற வேண்டும்.
கிழக்கு பார்த்தவாறு நின்று பூமியில் ஊற்ற வேண்டும். மண் பாங்கான இடத்தில் ஊற்ற வேண்டும். இல்லையென்றால் ஒரு தொட்டி வாங்கி அதில் மண் போட்டு செடி நட்டு அந்த மண்ணில் இந்த தண்ணீரை ஊற்றுங்கள். பூக்கள் இல்லை என்றால் வெறும் தண்ணீரை யாவது ஊற்றுங்கள். இந்த தண்ணீரை கீழே ஊற்றும்போது இந்த மந்திரத்தை சொல்லுங்க.
மந்திரம்
ஸ்ரீ சிவ சூரிய நாராயணாய
ஸ்வாமினே நமஹ !
மந்திரத்தை மூன்று முறை ஐந்து முறை இப்படி எத்தனை முறை வேண்டும் என்றாலும் சொல்லலாம். அது உங்களுடைய விருப்பம் தான். காலையில் தொடர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி பூமியில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றினாலே உங்களுக்கு வேலை கிடைக்கும் யோகம் வந்துவிடும். இதோடு சேர்த்து வாரம் தோறும் திங்கட்கிழமை வியாழக்கிழமை நேராக துர்க்கை அம்மன் சன்னிதானத்திற்கு செல்லுங்கள். இந்த அம்பாளை கார்த்தியாயினி என்ற பெயரை கொண்டு அழைப்பார்கள்.
இவளை செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வேலை கிடைக்க திங்கட்கிழமை வியாழக்கிழமை கட்டாயம் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். உங்களால் முடிந்த சிவப்பு நிற பூக்களை வாங்கிக் கொண்டு போய் துர்கை அம்பாளிடம் கொடுத்து விட்டு எனக்கு நீதான் வேலை தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டு சண்டை போட்டு விட்டு வாருங்கள்.
அறியாமல் செய்த தவறுக்காக இந்த தண்டனை என்றால் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்ல வேலையை வாங்கி தருவாள் துர்க்கை. திங்கட்கிழமை வியாழக்கிழமை, ஏன் தினம் தோறும் கூட துர்க்கை அம்மன் பாடலை வீட்டில் ஒலிக்க விடுங்கள். ‘ஐகிரி நந்தினி நந்தித மேதினி’ மகிஷாசுரமர்த்தினி பாடல் நம் எல்லோருக்கும் தெரியும். தினமும் இதைக் கேளுங்கள். உங்களுடைய வீட்டில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். நிச்சயம் நல்ல சம்பளத்தோடு உங்களுக்கான வேலை உங்களைத் தேடி வரும்.
இதையும் படிக்கலாமே: ஆவணி அமாவாசை காரிய சித்தி நேரம், மந்திரம்
முயற்சிகளை கைவிட வேண்டாம். மேலே சொன்ன வழிபாடு மிக மிக எளிமையான வழிபாடு அதே சமயம் சக்தி வாய்ந்த வழிபாடு. ஜாதகத்தில் உங்களுக்கு எவ்வளவு பெரிய சோதனை வரக்கூடிய காலகட்டமாக இருந்தாலும் அதை உடைத்து எறியும் சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.