சொந்தமாக நிலம் வாங்குவதற்கும் சொந்தமாக வீடு வாங்குவதற்கும் ஒரு யோகம் வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த யோகத்தை உங்கள் கையில் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய பரிகாரம்தான் இந்த பரிகாரம். 11 திங்கட்கிழமைகள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு சொந்த நிலம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும்.
உங்கள் ஜாதக கட்டத்தில் நீங்கள் இப்போது நிலமாக கூடிய யோகமே இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த பரிகாரம் உங்கள் ஜாதக சூழ்நிலையையும் சரி செய்யும். சொந்த நிலத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் விலகும். சொந்த வீட்டில் நீண்ட நாட்களாக வீடு கட்ட முடியாமல் இருந்தால், அந்த இடத்தில் சீக்கிரம் வீடு கட்ட தொடங்கி விடுவீர்கள். சில பேர் நிலத்தை வைத்திருப்பார்கள். அதை விற்க வேண்டும் என்று நினைப்பார்கள். நல்ல விலை போகாது அப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு எளிமையான ஆன்மீக பரிகாரம் இதோ உங்களுக்காக.
நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர
இந்த பரிகாரத்திற்கு ஒரு மண் அகல் விளக்கு தேவை. பாலிஷ் செய்யப்படாத சுத்தமான மண் விளக்கு வாங்கிக் கொள்ளுங்கள். சில மண் விளக்குகளில் டிசைன் போட்டு மேலே வழுவழுப்பாக பாலிஷ் செய்யப்பட்டு இருக்கும். அது பரிகாரத்திற்கு பயன்படத்த வேண்டாம். அதை மஞ்சள் தண்ணீரில் ஊற வைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள், அந்த விளக்குக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து பூஜை அறையில் வையுங்கள்.
இந்த மண் அகல் விளக்கின் உள்ளே, கொஞ்சமாக மஞ்சள், 2 சொட்டு காய்ச்சாத பசும்பால் ஊற்றி கலந்தால் சந்தனம் போல் ஒரு திலகம் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் அந்த நிலம் வசிய திலகம். திங்கட்கிழமை காலையில் குளித்து முடித்தவுடன் இந்த திலகத்தை தயார் செய்து, குலதெய்வத்தை நினைத்து இந்த திலகத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு, உங்களுடைய வேண்டுதலை சொல்லுங்கள். சொந்தமாக நிலம் வாங்க வேண்டுமா.
நிலத்தில் வீடு கட்ட வேண்டுமா அல்லது நிலம் சீக்கிரம் விற்க வேண்டுமா எதுவாக இருந்தாலும் அந்த வேண்டுதலை சொல்லி இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். 11 திங்கட்கிழமை விடாமல் இதை நீங்கள் செய்தால் உங்களுடைய அந்த குறிப்பிட்ட பிரச்சனை தீரும். ஆண்களும் இதை செய்யலாம்.
பெண்களும் இதை செய்யலாம். பெண்களுக்கு இடையில் மாதவிடாய் நாள் வரும். அந்த வாரத்தை தவிர்த்துவிட்டு நீங்கள் 11 வாரம் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். தீராத நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு இது ஒரு எளிமையான பரிகாரம். மண் விளக்கு செவ்வாய், மஞ்சள் குரு பகவான், அதில் ஊற்றப்படும் பால் சந்திர பகவான், இதையெல்லாம் சேர்த்து திலகத்தை வைத்துக் கொள்ளும் போது நம்முடைய வேண்டுதலை இந்த மூன்று கிரகங்களும் சீக்கிரம் நிறைவேற்றி வைக்கும்.
இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற முருகன் வழிபாடு
இந்த மூன்று கிரகங்களை சாந்தி படுத்தினால் போதும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்துவிடும் உங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது என்றால் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.