- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதல் நிறைவேற முருகன் நெய்வைத்தியம்

வேண்டுதல் நிறைவேற முருகன் நெய்வைத்தியம்

- Advertisement -

இன்று வளர்பிறை சஷ்டி திதி. நம்முடைய செல்வ வளத்தையும், சந்தோஷத்தையும் பல மடங்கு பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டிய வழிபாடு முருக பெருமான் வழிபாடு. இந்த கலியுகத்து கடவுள் முருகன், நாம் கூப்பிட்ட உடனேயே நம்முடைய குரலுக்கு செவி சாய்க்க வேண்டும், நம் கஷ்டங்களை அவன் காதால் கேட்டு சீக்கிரம் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றால், அந்த இறைவனுக்கு நாம் எதை நிறைவேத்தியமாக வைக்க வேண்டும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை படித்து தெரிந்து கொள்வோம்.

முருகனுக்கு என்ன நெய் வைத்தியம் வைப்பது

நம் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் நம்முடைய பொருளை, நமக்கு சொந்தமான ஒரு பொருளை தான் முருகனுக்கு நெய்வேதியமாக வைக்க வேண்டும். இந்த உலகத்தில் நமக்கு சொந்தமானது எது. பூ, பழம், பஞ்சாமிர்தம், இன்னும் விதவிதமாக நாம் சமைத்த பலகாரங்கள் இதெல்லாம் நமக்கு சொந்தமானதா.

- Advertisement -

இப்படி பணம் கொடுத்து வாங்கக்கூடிய பொருட்கள் நமக்கு சொந்தமா. நிச்சயம் கிடையாது. கடையிலிருந்து பணம் கொடுத்து எதை வாங்கி வைத்தாலும், அது நம்முடையது அல்ல. பூமியிலிருந்து விளைந்த பூ பழம் கூட இந்த பூமிக்கு தான் சொந்தம் இயற்கைக்கு தான் சொந்தம் அது நமக்கு சொந்தமில்லை. நாம் சம்பாதித்த பணமாகவே இருந்தாலும், அந்த பணத்தைக் கொண்டு நாம் சமைத்த உணவாகவே இருந்தாலும், அது நம்மிடம் இருந்து பெறப்பட்ட நெய்வேத்தியம் அல்ல.

அப்போது நம்மிடமிருந்து எந்த பொருளை தான் முருகனுக்கு நெய்வேத்தியம் வைப்பது. 2 விஷயங்கள் இருக்கிறது. ஒன்று உண்மையான பக்தி, நம்பிக்கையோடு உங்கள் பக்தியை இறக்கி அவன் பாதங்களில் வையுங்கள். முருகனை நீங்கள் நினைத்து நினைத்து உள்ளம் உருகும் போது உங்களுக்குள் ஒரு சந்தோஷம் வரும். அந்த சந்தோஷத்தின் மூலம் இரண்டு சொட்டு ‘ஆனந்த கண்ணீர்’ வரும்.

- Advertisement -

அந்தக் கண்ணீரை முருகன் பாதத்தில் சமர்ப்பணம் செய்தால் நீங்கள் கூப்பிட்டு குரலுக்கு முருகன் செவி சாய்ப்பான். உங்களுடைய வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றி வைப்பான். இதை நான் சொல்லவில்லை. தேச மங்கையர்க்கரசி அவர்கள் சமீபமாக நடந்த ஒரு சொற்பொழிவில் சொன்ன விஷயம் தான் இது. உங்களுக்கும் நிச்சயம் இது பயன்படும். முருகனை மனம் உருகி இரண்டு சொட்டு ஆனந்த கண்ணீரோடு வழிபாடு செய்து பாருங்களேன் பிறகு நடக்கும் அதிசயத்தை உங்களால் நம்பவே முடியாது.

இந்த தகவலோடு சேர்த்து இன்று முருகனைப் பற்றி இன்னொரு நல்ல தகவலையும் தெரிந்து கொள்வோம். இதுவும் தேச மங்கையர்க்கரசி சொன்ன விஷயங்கள் தான். பழனிக்குச் சென்றால் அவனை ஆண்டி அலங்காரத்தில் பார்க்கக் கூடாது. ஆண்டியாக முருகனை பார்த்தால், நாமும் ஆண்டியாகி விடுவோம் என்ற ஒரு கருத்து நம்மிடத்தில் இருக்கிறது. இந்த பூமியில் இரண்டு விஷயங்கள் இல்லா என்றால் நமக்கு பயம் வரும்.

- Advertisement -

இந்த இரண்டு விஷயங்கள் இல்லாமல் நம்மால் வாழவும் முடியாது. ஒன்று அறிவு, இன்னொன்று செல்வம். வெறும் அறிவை வைத்தும் நம்மால் வாழ முடியாது. வெறும் செல்வத்தை வைத்தும் நம்மால் வாழ முடியாது. அறிவும் செல்வமும் சேர்ந்து கிடைக்கக் கூடிய வாழ்க்கை தான் நல்வாழ்க்கையாக இருக்கும். அந்த முருகனிடம் தான் இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்து இருக்கிறது.

பழனியில் காலை நேரத்தில் ஆண்டியாக நிற்கும் முருகன், மாலை நேரத்தில் ராஜா அலங்காரத்தில் ஜொலிப்பார். ஆண்டியாக இருக்கும் ஏழை கூட, என்னை வந்து பார்த்து தரிசனம் செய்தால், அவன் கூடிய விரைவில் ராஜாவாக மாறுவான் என்பது தான் இந்த வழிபாட்டு முறைக்கு உண்டான அர்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. முருகனுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அதுதான் பண்டாரம்.

பண்டாரம் என்ற தமிழ் வார்த்தையை இன்று நாம் தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்கின்றோம். பண்டாரம் என்றால் ஒன்றுமே இல்லாதவன் என்ற அர்த்தம் இருக்கிறது. அந்த முருகப்பெருமான் தூய தமிழில் இதற்கு உண்டான அர்த்தத்தை பார்த்தால் ‘செல்வத்தை குவித்து வைத்திருப்பவன்’ அந்த பழனி முருகன் என்ற அர்த்தத்தை குறிக்கின்றது. உங்களுக்கு எதுவுமே இல்லையா, பழனி முருகப் பெருமானிடம் போய் கேளுங்கள்.

இதையும் படிக்கலாமே: நகை கடன் தீர வழிபாடு

அவனிடம் ‘ஆண்டியாக சென்றால் கூட அரசனாகி விடலாம்’. அவன் ஆண்டியாக நிற்கும் கோலத்தை பார்த்து கேளுங்கள். என்னுடைய வாழ்க்கை ராஜாவை போல மாற வேண்டும் என்று, கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கான ராஜ வாழ்க்கை உங்களைத் தேடி வரும். இனிமேல் பழனி முருகனை ஆண்டியாக பார்த்தால், நாமும் ஆண்டியாக மாறிவிடுவோம் என்ற தவறான கருத்தை உங்களுடைய மனதில் இருந்து மாற்றிக் கொள்ளுங்கள். முருக பெருமானை வழிபாடு செய்பவர்கள் என்றுமே கைவிடப்பட்டதில்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்