இன்று இரவு 7 மணி 10 நிமிடத்திற்கு பிறகு அஷ்டமி திதி என்பது ஆரம்பம் ஆகிறது. இந்த அஷ்டமி திதி அன்று நாம் செய்யக்கூடிய சில எளிமையான பரிகாரங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சரித்திரத்தை நீக்குவதோடு நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி அடிக்க உதவும். மேலும் சகல ஐஸ்வரியமும் பெற்று சிறப்புடன் வாழ முடியும். அப்படிப்பட்ட ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்கப் போகிறோம்.
தரித்திரம் நீக்கும் அஷ்டமி இரவு பரிகாரம்
பொதுவாக அஷ்டமி திதி வரும் நாட்களில் கால பைரவரையும், வராகி அம்மனையும் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. இவர்கள் இருவருமே காவல் தெய்வமாக திகழ்கிறார்கள். இவர்களை வழிபாடு செய்யும்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அஷ்டமி திதி அன்று நாம் செய்யக்கூடிய பரிகாரமும் நம்மை பிடித்திருக்கக் கூடிய தரித்திரம் விளங்குவதற்கு உதவி செய்யும். அந்த பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு எலுமிச்சம் பழம் வேண்டும். இரவு படுக்க செல்வதற்கு முன் நம் வீட்டு பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் டம்ளர் அளவிற்கு சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு இந்த தண்ணீருக்குள் ஒரு எலுமிச்சம் பழத்தை போட வேண்டும். அடுத்ததாக வீட்டில் இருக்கக்கூடிய கல்லுப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்து இந்த தண்ணீரில் போட்டு விட வேண்டும்.
இந்த கண்ணாடி டம்ளரை அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய குலதெய்வத்தின் படத்திற்கு பின்னால் வைக்க வேண்டும். குலதெய்வ படத்தை வைத்து வழிபாடு செய்யாதவர்கள் இஷ்ட தெய்வ படத்திற்கு பின்னால் வைக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வீட்டு பூஜை அறையில் நம்முடைய இடது பக்க மூலையில் எந்த சுவாமியின் படம் இருக்கிறதோ அந்த படத்திற்கு பின்னால் இந்த டம்ளரை வைத்துவிட வேண்டும். அவ்வளவுதான். வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்த பிறகு பூஜை அறைக்கு செல்வோம் அல்லவா? அப்படி செல்லும் பொழுது இந்த டம்ளரை எடுத்து இதில் இருக்கக்கூடிய தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். பிறகு இந்த எலுமிச்சம் பழத்தை நான்காக நறுக்கி அதற்குள் மூன்று மிளகை வைத்து அந்த எலுமிச்சம் பழத்தை மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்திலோ அல்லது கால் படாத இடத்திலோ போட்டு விட வேண்டும். வேறு எதுவும் செய்ய வேண்டாம்.
இப்படி செய்து முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கை கால்களை கழுவி விட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி எப்பொழுதும் போல் சுவாமி கும்பிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய தரித்திரம் மற்றும் தீய சக்திகள் அனைத்தும் விலகும். எதிரிகள் தொல்லை நீங்கும். சகல சௌபாக்கியம் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தடைபட்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக நடைபெறும்.
இதையும் படிக்கலாமே:செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்திருக்கும் அஷ்டமி பரிகாரம்
இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த அஷ்டமி இரவில் செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.