வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. சிலரால் கடனுக்கு வட்டியை கூட கொடுக்க முடியாத சூழ்நிலை. வருமானத்தை கொண்டு வாழ்கின்றோமோ இல்லையோ, வருமானம் வந்தவுடன் அதை எடுத்து கடனுக்காக கொடுக்கின்றோம். இதையெல்லாம் நினைக்கும் போதே ரத்த கண்ணீர் வடிகிறது. அந்த அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் கடன் என்ற கஷ்டம் நம்மை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது.
எதைத் தின்றால் பித்தம் தெலியும் என்று தேடி தேடி ஓடுகின்றோம். இப்படி கடன் சுமையால் அவதிப்படுபவர்களுக்கு இன்று ஒரு விடிவுகாலம் கிடைக்கப் போகிறது இந்த பதிவின் மூலம். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. இன்று இரவு 7:11 மணிக்கு அஷ்டமி திதியும் பிறக்கவிருக்கின்றது. அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்தால் கடன் சுமை குறையும். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபாடு செய்தாலும் கடன் சுமை குறையும்.
செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்திருக்கும் அஷ்டமி பரிகாரம்
இந்த இரண்டு கடவுள்களையும் சேர்ந்து வழிபடக்கூடிய ஒரு நல்ல நேரத்தில் நாம் செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரம் நமக்கு நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும். இன்று 10-9-2024 செவ்வாய்க்கிழமை. இன்று இரவு 7:11 மணிக்கு அஷ்டமி திதி பிறக்கின்றது. நாளை புதன்கிழமை இரவு 7:21 மணி வரை அஷ்டமி திதி இருக்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணியில் இருந்து 9:00 மணி வரை செவ்வாய் ஹோரையும் இருக்கிறது. ஆக இந்த நேரங்கள் அனைத்தும் சேரும்போது, இந்த நேரம் கடனை அடைப்பதற்கு வேண்டுதல் வைக்க பொன்னான நேரமாக, நமக்கு கடவுள் கொடுத்திருக்கும் ஒரு வரம் என்று சொல்லலாம்.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். ஒரு சின்ன மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கற்பூரம் வையுங்கள். சின்னதாக பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம் வைத்தால் போதும். உங்களுடைய கையில் 8 மிளகு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிளகை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டே, பைரவா என்னுடைய கடன் சுமையை எல்லாம் குறைத்து விடு என்று சொல்லிவிட்டு பிரார்த்தனை வைத்து ‘ஓம் மகா பைரவனே போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு, என்னுடைய கடன் இந்த நெருப்போடு நெருப்பாக பொசிங்கி போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
அந்த அகல்விளக்கில் இருக்கும் கற்பூரத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை சொல்லி, பிரார்த்தனையை செய்து கையில் இருக்கும் மிளகை அந்த நெருப்பில் போட்டு விட வேண்டும். நெருப்பில் இந்த மிளகு எப்படி வெடித்து சிதறுகிறதோ, அதேபோல உங்களுடைய கடன் சுமையும் வெடித்து சிதறும். கடன் காணாமல் போகும். இதுதான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கை.
இன்று இந்த நேரத்தை தவற விட்டவர்கள் நாளை 11-9-2024 புதன்கிழமை இரவு 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விட வேண்டும். இந்த எளிய பரிகாரத்தை எந்த அஷ்டமி திதி வந்தாலும் செய்யலாம். ஆனால் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்திருக்கும் இந்த அஷ்டமி திதியில் செய்வது என்பது அதிசக்தி வாய்ந்தது.
இதையும் படிக்கலாமே: கடவுளுக்கு படைக்கும் தேங்காய், வாழைப்பழ ரகசியம்
இந்த நாளில் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் உங்கள் கடன் சுமையிலிருந்து வெளிவருவதற்கு ஏதாவது ஒரு ரூபத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தை பெருக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் குலதெய்வத்தின் மீது பாரத்தை போட்டு இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.