வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும், கடன் பிரச்சினை தீர வேண்டும், சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் பணவரவு என்பது அதிகரிக்க வேண்டும். பண வரவு அதிகரித்தால் தான் அவர்கள் நினைத்தது போல் அவர்களால் வாழ முடியும். அப்படி பண வரவை அதிகரிப்பதற்கு மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் நாளைய தினம் ஆவணி மாத வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாருக்கு எந்த முறையில் எளிமையான பூஜை செய்தால் பணவரவு அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணவரவை அதிகரிக்க மகாலட்சுமி பூஜை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அப்படி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கும் மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்குள் நிரந்தரமாக இருப்பதற்கும் பல வழிமுறைகளை நாம் பின்பற்றுவோம். அப்படி வழிமுறைகளை பின்பற்றியும் பணவரவில் தடைகள் இருக்கிறது, கடன் பிரச்சனை தீராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் இந்த வழிபாட்டை நாளைய தினம் செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
இந்த வழிபாட்டை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்யலாம். வெள்ளிக்கிழமை என்றாலே வீட்டில் வழிபாடுகள் இருக்கும். அந்த வழிபாடுகள் அனைத்தையும் நிறைவு செய்த பிறகு மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிறத்திலான பூக்களை மாலையாக தொடுத்து போட வேண்டும். அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு வெண்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்யும் பொழுது வெல்லத்தை சேர்க்காமல் சர்க்கரையை சேர்த்து செய்ய வேண்டும். மேலும் அதில் அதிக அளவில் நெய் ஊற்றி செய்ய வேண்டும்.
இப்படி செய்த பிரசாதத்தை மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். அடுத்ததாக வாசனை மிகுந்த தாழம்பூ குங்குமத்தை வாங்கி வைத்து மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரத்தை கூறி மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி அர்ச்சனை செய்த இந்த குங்குமத்தை வெள்ளி குங்குமச்சிமிழில் போட்டு வைத்து தினமும் மகாலஷ்மி தாயாரை நினைத்து நம்முடைய நெற்றியில் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய மனது தெளிவு பெறும் எதை செய்தால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற ஒரு தெளிவு பிறக்கும். இதனால் பணவரவை அதிகரிப்பதற்குரிய வழிகளும் கிடைக்கும்.
மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரத்தை படிக்க தெரியாதவர்கள் அந்த பாடலை கைபேசியில் ஒலிக்கச் செய்தும் இந்த அர்ச்சனையை செய்யலாம். ஆனால் கண்டிப்பாக முறையில் மகாலட்சுமி அஷ்டோத்திரத்தை தான் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிறத்தில் ஆன மலர்களையும் பிரசாதங்களையும் வைத்து படைப்பதன் மூலம் சுக்கிர பகவானின் அருளும் நமக்கு கிடைக்கும். மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு கிடைக்கும் இவர்கள் இருவரின் அருளைப் பெற்றாலே நம்முடைய வாழ்க்கையில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய பணவரவு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே:தரித்திரம் ஏற்படாமல் இருக்க
மகாலட்சுமி தாயாரின் அருளையும் சுக்கிர பகவானின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு செய்யக்கூடிய இந்த எளிமையான பூஜையை முழு மனதோடு செய்து பணவரவை அதிகரித்து சிறப்புடன் வாழலாம் என்ற தகவலை கூறு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.