- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதரித்திரம் ஏற்படாமல் இருக்க

தரித்திரம் ஏற்படாமல் இருக்க

- Advertisement -

வீட்டில் சம்பாதிக்கக்கூடிய நபர்கள் நன்றாக சம்பாதித்தால்தான் அந்த குடும்பத்தில் எந்தவித கஷ்டமும் ஏற்படாது. எவ்வளவுதான் அதிகமான அளவில் சம்பாதித்தாலும் அந்த பணமானது வீட்டில் நிலைத்திருக்க வேண்டும். அப்படி நிலைத்திருக்காமல் ஏதாவது ஒரு ரூபத்தில் விரையம் ஆகிக் கொண்டே செல்கிறது என்னும் பட்சத்தில் அந்த வீட்டில் தரித்திரம் இருக்கிறது என்று அர்த்தம். அப்படிப்பட்ட தரித்திரம் இருக்கும்பொழுது நாம் செய்யக்கூடிய எந்த முயற்சிகளும் வெற்றியடையாது. கடன் பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். எந்தவித சுப காரியங்களும் எளிதில் நடைபெறாது. இவை அனைத்தையும் நீக்குவதற்கு மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்கள் வீட்டில் நிறைவாக இருக்க வேண்டும். அந்த பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தரித்திரம் ஏற்படாமல் இருக்க

தரித்திரம் இருக்கும் வீட்டில் மகாலட்சுமி அடியெடுத்து வைக்க மாட்டாள் என்று கூறப்படுகிறது. அந்த தரித்திரத்தை நாம் நீக்கினால் தான் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வருவாள். மகாலட்சுமி வீட்டிற்குள் வந்தால் தான் நாம் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியங்கள் நடைபெறும் என்று கூறிக் கொண்டே செல்லலாம். அப்படி மகாலட்சுமி நம்முடைய வீட்டில் இருக்க வேண்டும் என்றால் மகாலட்சுமிக்குரிய பொருட்கள் நம்முடைய வீட்டில் இருக்க வேண்டும்.

- Advertisement -

மகாலட்சுமி பல வகையான பொருட்களில் வீற்றிருக்கிறார். அதிலும் குறிப்பாக நம்முடைய வீட்டில் சமையலறையில் இருக்கக்கூடிய சில பொருட்களில் மகாலட்சுமி நீக்கமற நிறைந்திருக்கிறாள். அந்த பொருட்கள் எப்பொழுதும் நம் வீட்டில் நிறைவாக இருந்து கொண்டே இருந்தால் மகாலட்சுமியும் வீட்டிற்குள் வந்து விடுவாள் என்று கூறப்படுகிறது. இந்த பொருட்களை சுத்தமாக காலி செய்து அந்த பொருட்கள் இருக்கும் பாத்திரத்தை கழுவி காயவைத்து பிறகு புதிதாக வாங்கி போட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அந்த பொருட்கள் காலியாவதற்கு முன்பாகவே கடையிலிருந்து அந்த பொருட்களை வாங்கி வந்து வைத்து விட வேண்டும். அப்படிப்பட்ட முக்கியமான சில பொருட்கள் பற்றி பார்ப்போம்.

அந்த பொருட்கள் தான் நாம் சாப்பிடும் அரிசி, மஞ்சள் தூள், கல் உப்பு, எண்ணெய். இவை அனைத்தும் மங்களகரமான பொருட்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பொருட்களில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள் என்றும் கூறப்படுகிறது. பலரும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் கல் உப்பை வாங்கி வந்து வைப்பார்கள். இதன் மூலம் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பதாகவே கருதுவார்கள். அப்படி கல் உப்பு மட்டுமல்லாமல் அரிசி, மஞ்சள் தூள், எண்ணெய் இவையும் நம்முடைய வீட்டில் நிறைவாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இதோடு சேர்த்து ஊறுகாய் பல வகைகளில் நாம் வாங்கி வீட்டில் வைப்பதன் மூலம் குபேர பகவானின் அருளையும் நம்மால் பெற முடியும். இவை அனைத்தையுமே சுத்தமாக காலியாகும் வரை வைத்திருக்காமல் அது காலியாவதற்கு முன்பாகவே புதிதாக வாங்கி வைப்பதன் மூலம் வீட்டில் சரித்திரம் என்பது இருக்காது. இதோடு மட்டுமல்லாமல் இந்த பொருட்களை கீழே சிந்தாமல், வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமியின் அருளால் செல்வநிலை உயரும்.

இதையும் படிக்கலாமே:துஷ்ட சக்திகள் விலக விளக்கு
எப்பொழுதும் வாங்கக்கூடிய பொருட்கள்தான் என்றாலும், அவை முழுவதுமாக தீர்வதற்கு முன்பாக வாங்கி வைத்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதன் மூலம் செல்வ நிலை உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்