அது என்னங்க, பணக்கார பெருமாள். அப்போ மத்த தெய்வங்களை வழிபாடு செய்யும்போது நமக்கு செல்வ வளம் அதிகரிக்காதா என்று கேட்காதீங்க. பணக்கார சாமி என்றாலே அந்த இடத்தை நாம் பெருமாளுக்கு தானே கொடுத்திருக்கின்றோம். நாளை பெருமாளுக்கு முக்கியமான நாள். திருவோண நட்சத்திரம், சனிக்கிழமை, ஏகாதசி திதி. இந்த மூன்று விசேஷங்களும் சேர்ந்து இருக்கிறது.
நாம் பெருமாளுடைய எனர்ஜியை பெற வேண்டும். பெருமாளின் ஆசிர்வாதத்தை பெறவேண்டும். நமக்கு இருக்கும் பண கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து, பெருமாளுக்கு திருப்பதியில் எப்படி பணமழை கொட்டுதோ, அதேபோல நம்முடைய வீட்டிலும் பழமொழி கொட்ட வேண்டும், என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நம்முடைய வீட்டிலும் நிச்சயம் பணமழை கொட்டும்.
ஏகாதசி தினத்தில் குளிக்கும் முறை
கூடுமானவரை நாளை சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து குளித்து விட வேண்டும். நீங்கள் சுடுதண்ணீரில் குளித்தாலும் சரி, பச்சை தண்ணீரில் குளித்தாலும் சரி, குளிக்கின்ற தண்ணீரில் முதலில் ஒரு முக்கோணம் வரைந்து கொள்ளுங்கள். அந்த முக்கோணத்திற்கு நடுவில் 1176 என்ற நம்பரை எழுதுங்கள். ஒரு குத்துமதிப்பாக தண்ணீரில் முக்கோணம் வரைந்து இந்த நம்பரை அந்த தண்ணீரில் எழுதிக் கொள்ளலாம் தவறு கிடையாது.
கோவிந்தா, நாராயணா, பெருமாளே இப்படி ஏதாவது ஒரு பெருமாளின் நாமத்தை சொல்லிக் கொண்டே இந்த நம்பரையும் சிம்பலையும் தண்ணீரில் போட்டுவிட்டு, அந்த தண்ணீரில் இரண்டு துளசி இலை, முடிந்தால் ஒரு துண்டு பச்சை கற்பூரம், போட்டு கலந்து 10 நிமிடம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து விடுங்கள். உடம்பு மட்டும்தான் குளிக்கிறீர்கள் என்றால் தவறு கிடையாது.
உடம்புக்கு மட்டும் குளித்துவிட்டு இந்த தண்ணீரை கொஞ்சம் எடுத்து தலை மேல் தெளித்துக் கொள்ளுங்கள். காலையில் நான் குளித்து விட்டேன். இந்த பரிகாரம் எனக்கு தெரியாது. என்ன செய்வது. நாளை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், ஒரு சின்ன டம்ளர் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கோங்க. அதில் இரண்டு துளசி இலைகளை போட்டு, அதில் மேல் சொன்ன விஷயங்களை எழுதி, அந்த தண்ணீரை உங்கள் தலைமேல் தெளித்துக் கொண்டாலும் உங்களை பெருமாள் ஆசிர்வாதம் செய்வார்.
பெருமாளுக்கு உண்டான எனர்ஜியை கொடுக்கக்கூடிய சிம்பலும் நம்பரும் தான் அது. மேலே சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை மறக்காதீங்க. நாளைக்கு குளிக்கும் போது செஞ்சிடுங்க. நாளை சூரிய உதயத்திற்கு பின்பு தான் எங்களால் குளிக்க முடியும், அவ்வளவு காலையில் கண்விழிக்க முடியாது என்பவர்களாக இருந்தாலும் பரவாயில்லை சூரிய உதயத்திற்கு பின்பு இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் இந்த முறையில் குளிக்கும் போது நம்மை பிடித்த தரித்திரம் விலகி, பெருமானின் ஆசீர்வாதம் நமக்கு பரிபூரணமாக கிடைத்து, அந்த மகாலட்சுமி ஆசிர்வாதமும் நமக்கு பரிபூரணமாக கிடைத்து, நம் வாழ்க்கையில் நல்லது நடக்க துவங்கிவிடும். நாளை வீட்டில் ஏகாதசி வழிபாடு செய்ய முடியாது என்பவர்கள் கூட பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு போங்க.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தேடி வர பூட்டு பரிகாரம்
அவருக்கு ஒரு தாமரை பூ, ஒரு துளசி இலை மாலை வாங்கி போட்டு, கும்பிட்டு, வீடு திரும்பும் போது அங்கு கொடுத்த துளசி இலை பிரசாதங்களை வாங்கி வந்து பீரோவில் வைத்தால் உங்கள் செல்வ கடாச்சும் உயரும் என்பதும் நம்பிக்கை. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றி பலன் பெறவும்.