வாழ்க்கையில் துன்பங்கள் இல்லாத மனிதர்களே கிடையாது. இன்பமும் துன்பமும் கலந்த இந்த வாழ்க்கையும் சிலருக்கு மட்டும் ஏனோ இதற்கு நேர் மாறாக எப்போது பார்த்தாலும் துன்பம் பாடாய் படுத்தி எடுக்கும். இந்நிலை மாற ஒரு சிறிய பரிசோதனை செய்வதற்கு பூட்டை வைத்து பரிகாரம் செய்யலாம். சக்தி வாய்ந்த துன்பம் தீர்க்கும் இந்த பூட்டு பரிகாரம் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
கோவிலில் வழக்கமாக நம் வேண்டுதல்கள் நடக்குமா? நடக்காதா? என்று பார்க்க பூ போட்டு பார்ப்பது உண்டு. ஒரு பேப்பரில் சிகப்பு பூவும், மற்றொரு பேப்பரில் வெள்ளை பூவும் போட்டு மடித்து வைத்து கோவிலில் கொடுத்து பிரார்த்தித்து கொண்டு எடுத்து பார்ப்பார்கள். நாம் வேண்டியது பலிக்க வெள்ளை பூவும், நினைத்ததை செய்யாதே என்பதை சொல்ல சிகப்பு பூவும் வந்து கடவுள் போல் அருள் கொடுக்கும்.
இது போன்ற ஒரு விஷயம் தான் இந்த பூட்டு பரிகாரமும். தீராத துன்பங்களும் தீரும், வேண்டிய வேண்டுதல்களும் நிறைவேறும், அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும், அதற்கு முதலில் ஒரு புதிய பூட்டு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். சிறிய பூட்டு வாங்கினால் போதும். நீங்கள் பூட்டு வாங்கும் பொழுது அதை கடைக்காரர் கூட திறந்து பார்க்கக் கூடாது. பூட்டிய பூட்டாக அப்படியே தான் இருக்க வேண்டும். நீங்களும் பூட்டு சரியாக வேலை செய்கிறதா? என்று பரிசோதிக்கக் கூடாது.
பூட்டு வாங்கும் பொழுது சொன்ன விலைக்கு அப்படியே பேரம் பேசாமல் வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கி வந்த புதிய பூட்டை அன்று இரவு உங்கள் தலைமாட்டில் வைத்து படுத்துக் கொள்ளுங்கள். காலையில் நன்கு குளித்து முடித்து வீட்டில் இருக்கும் பூஜை அறையில் பூட்டை வைத்து விளக்கேற்றி சிறு வழிபாடு செய்துவிட்டு, அருகில் இருக்கும் ஏதாவது ஒரு இஷ்ட கோவிலுக்கு செல்லுங்கள்.
கோவிலுக்கு சென்று நீங்கள் வாங்கிய அந்த பூட்டை சாவியுடன் அப்படியே வைத்துவிட்டு, மனதார இறைவனிடம் உங்கள் துன்பங்கள் தீர பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறைவனிடம் பாரத்தை இறக்கிவிட்டு நம்பிக்கையோடு உங்கள் துன்பமெல்லாம் இன்றோடு முடிந்து விடும், அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் என்று திருப்தியோடு வீட்டிற்கு செல்லுங்கள்.
கோவிலில் இருக்கும் இந்த பூட்டை வரும் பக்தர்கள் யாரேனும் திறந்து பார்க்க ஆசைப்படுவார்கள். எல்லோரும் அந்த பூட்டை திறந்த விட முடியாது. உங்கள் கர்ம பலனை தீர்ப்பதற்கு என்று இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாராவது ஒருவர் அந்த பூட்டை நிச்சயமாக திறக்க முன்வருவார்கள். அப்படி அவர் திறக்கும் பொழுது, நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிக்கலாமே:
பணம் சம்பாதிக்க பரிகாரம்
உங்களால் பூட்டை திறந்தவருக்கும் நற்பலன்கள் வந்து சேரும், புண்ணியங்கள் பெருகும். நம்பிக்கையுடன் செய்யும் இந்த ஒரு பரிகாரம் இதுவரை உங்கள் வாழ்வில் பட்ட துன்பங்களை நீக்கி, அதிர்ஷ்ட காற்றை உங்கள் பக்கம் வீச செய்யும். மாத்திரை போட்டவுடன் அது உள்ளுக்குள் சென்று வேலை செய்வதற்குள் நோய் தீர்ந்து விடுவதாக நாம் நம்புவது போல் தான் இதுவும். நம்பி செய்து பாருங்கள், உங்களை துரத்திக் கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறையாக சிந்திப்பீர்கள்.