இந்த பிரபஞ்சத்தில் கூடுதல் சக்தியானது, ஒரு சில சக்தி வாய்ந்த நாட்களில் அதிகப்படியாக வெளிவரும். அந்த வகையில் பௌர்ணமி நாள் என்றால் இந்த பிரபஞ்சத்தில் நிலவு ஒளியானது, பூமி முழுவதும் பரவி இருக்கும். இந்த சமயத்தில் நாம் பிரபஞ்சத்திடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது அப்படியே நடக்கும் என்பது ஞானிகள் கருத்தாக இருக்கிறது. இன்றைய ஜோதிடம் சார்ந்த ஆன்மீகவாதிகளின் கருத்தும் அதுவே.
நாளைய தினம் செவ்வாய்க்கிழமை, தமிழ் மாதத்தின் முதல் நாள், புரட்டாசி 1, பெருமாளுக்கு உரிய நாள், செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உரிய நாள். இந்த நாளில் வந்திருக்கக் கூடிய பௌர்ணமி அன்று நாம் செய்ய வேண்டிய ஒரு மந்திர ஜபத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நாளைய தினம் இதை செய்தால் அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த தடையும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கலாம்.
பௌர்ணமி மந்திரம்
மேலே புகைப்படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முத்திரை தாமரை முதிரை. தாமரை என்பது மகாலட்சுமிக்கு சொந்தமானது. இந்த தாமரை முத்திரையை கையில் வைத்துக்கொண்டு, மகாலட்சுமியை வழிபாடு செய்வதன் செய்வதன் மூலம் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். அதாவது தாமரை பூவை மகாலட்சுமிக்கு சூட்ட வேண்டும் என்று சொல்லுவார்கள்.
எல்லா நேரத்திலும் நமக்கு தாமரை பூ கிடைக்காது. தாமரை பூக்கு பதில் உங்களுடைய கையை இப்படி தாமரை போல விரித்து வைத்து, மகாலட்சுமியை வழிபாடு செய்தால் தாமரை பூவை வைத்து மகாலட்சுமிக்கு வழிபாடு செய்த பலனை உங்களால் பெற முடியும். இதனால் உங்களுடைய செல்வ செழிப்பு உயரும் என்பது நம்பிக்கை.
நாளைய தினம் மாலை 6:00 மணிக்கு பௌர்ணமி நிலவு உதயமாகும், வெட்ட வெளியான இடத்தில் அமர்ந்து கொண்டு உங்களுடைய கையில் இந்த தாமரை முத்திரையை வைத்துக்கொண்டு ‘ஓம் சித்ராயை நமஹ’ ‘Om chithrayai namaha’ என்ற மந்திரத்தை 16 முறை சொல்ல வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி குலதெய்வத்தை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். மனதை அலைபாய விடக்கூடாது. ஓரிடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.
மூச்சை நன்றாக உள்வாங்கி கொள்ளவும். பிறகு மூச்சை வெளியே விடவும். மூச்சுப் பயிற்சி செய்து கொண்டே இந்த மந்திரத்தை சொல்லும் போது இந்த பௌர்ணமி நாளில் இருக்கக்கூடிய அத்தனை ஒட்டு மொத்த நல்ல ஆற்றலும் உங்களுடைய உடம்பு தன்னகத்தே ஈர்த்து கொள்ளும். அந்த சந்திர பகவானின் அருள் ஆசி உங்களுக்கு நிறைவாக கிடைக்கும். இந்த மாதம் முழுவதும் ஓடி ஓடி உழைக்கக்கூடிய சக்தி இந்த ஒரு மந்திரத்திற்கும் இந்த ஒரு பௌர்ணமி இரவுக்கு உண்டு என்று சொன்னால் மிகை ஆகாது.
இதையும் படிக்கலாமே: செல்வ வளம் உயர துவரம் பருப்பு பரிகாரம்
அது சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை யாரும் தவற விடாதீங்க. நாளை இரவு பௌர்ணமி நிலவு உதயமான பிறகு, இரவு 11 மணிக்கு முன்பு உங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் இதை செய்து விடுங்கள். 16 முறை என்பது ஒரு கணக்குக்காக சொல்லப்பட்டுள்ள விஷயம். உங்களால் இந்த மந்திரத்தை 10 நிமிடங்கள் தொடர்ந்து நிலவு ஒளியில் அமர்ந்து சொல்ல முடியும் என்றாலும் சொல்லலாம், எவ்வளவுக்கு எவ்வளவு இந்த மந்திரத்தை சொல்கிறீர்களோ, அவ்வளவு நன்மை உங்களை வந்து சேரும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை ஆன்மீகம் பின்பற்றி பலன் பெறுங்கள்.