- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் உயர துவரம் பருப்பு பரிகாரம்

செல்வ வளம் உயர துவரம் பருப்பு பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை என்பது வரும். பௌர்ணமியும் அமாவாசையும் மிகவும் முக்கியமான தினங்களாக கருதப்படுகிறது. நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும் பரிகாரங்களும் மற்ற நாட்களை விட அதிக அளவு பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய தினத்தில் பலரும் தங்களுடைய குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அதேசமயம் தங்களுடைய வாழ்க்கையில் தடைபட்டிருக்கக் கூடிய காரியம் நிறைவேறுவதற்காக பரிகாரங்களை செய்வார்கள். அந்த முறையில் மிகவும் எளிமையாக துவரம் பருப்பை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ வளம் உயர பரிகாரம்

சந்திரன் தொடர்புடைய நாட்கள் என்பது பெண் தெய்வங்களுக்கு மிகவும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது. அதனால் தான் பௌர்ணமி தினங்களில் பெண் தெய்வ வழிபாடு என்பது சிறப்புக்குரியது. அதேபோல்தான் அமாவாசை தினங்களில் உக்கிர தெய்வ வழிபாடும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டையும் அமாவாசை தினத்தில் நாம் மேற்கொள்வோம். இப்படி அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சில சிறப்பு மிகுந்த வழிபாடுகளை நாம் தொடர்ச்சியாக செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த முறையில் செல்வ செழிப்பு உயர்வதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு உயர வேண்டும் என்றால் அவர் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும். இந்த முயற்சிகள் வெற்றி அடையும் பட்சத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் படிப்படியாக நீங்கும். அப்படி படிப்படியாக நீங்கும் பொழுது செல்வ செழிப்பு என்பது உயர ஆரம்பிக்கும். பொதுவாக ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் அவருடைய கடன் பிரச்சனை. மேலும் தங்களுடைய பிள்ளைகளுக்கோ அல்லது தங்களுக்கோ திருமண தடை ஏற்பட்டு இருப்பின் அந்த பிரச்சனை. மேலும் வேலை தொடர்பான பிரச்சனைகள் இவைதான் மிகவும் முக்கியமான பிரச்சினையாக கருதப்படுகிறது.

இவை அனைத்திற்கும் காரணமாக திகழ்பவர் செவ்வாய் பகவான். அப்படிப்பட்ட செவ்வாய் பகவான் அருளை நாம் பரிபூரணமாக பெற்று விட்டோம் என்றால் நம் வாழ்க்கையில் நன்மை மட்டுமே நடைபெறும் என்று கூறப்படுகிறது. செவ்வாய் பகவானின் பரிபூரண அருளை பெறுவதற்கு உதவக்கூடிய ஒரு தானியமாக துவரம் பருப்பு திகழ்கிறது. அதனால் தான் செவ்வாய்க்கிழமை துவரம்பருப்பை வாங்கி வைத்து வழிபாடு செய்வது, துவரம் பருப்பின் மீது தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது சிறப்பு மிகுந்தது.

- Advertisement -

பௌர்ணமி திதி ஆரம்பிக்கும் பொழுதே நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அதை சமையலறையில் இருக்கக்கூடிய துவரம் பருப்பு டப்பாவில் போட்டு வைத்து விட வேண்டும். பௌர்ணமி திதி முடியும் வரை இந்த பொருட்கள் துவரம் பருப்பிலேயே இருக்கட்டும். பௌர்ணமி திதி முடிந்ததும் இந்த பொருட்களை எடுத்து நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். துவரம் பருப்பையும் சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு பௌர்ணமி திதியிலும் துவரம் பருப்பில் நாம் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைக்கும் போது செல்வநிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:ராஜ யோகம் கிடைக்க ஆவணி மாதம் கடைசி நாள் செய்ய வேண்டிய வழிபாடு
அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய துவரம் பருப்பில் இந்த இரண்டு பொருட்களை மட்டும் பௌர்ணமி தினத்தில் முழு நம்பிக்கையுடன் வைப்பவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத செல்வ வளர்ச்சி என்பது ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்