- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalலட்சுமி கடாட்சம் பெற புரட்டாசி முதல் நாள் வாங்க வேண்டிய பொருட்கள்

லட்சுமி கடாட்சம் பெற புரட்டாசி முதல் நாள் வாங்க வேண்டிய பொருட்கள்

- Advertisement -

மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும் என்று பலரும் பல வழிபாட்டு முறைகளை பின்பற்றுகிறார்கள். பல பரிகாரங்களை பின்பற்றுகிறார்கள். மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு நினைத்து நாம் செய்யக்கூடிய எளிமையான வழிமுறைகள் கூட மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறச் செய்யும். அந்த வகையில் புரட்டாசி மாதம் முதல் நாள் பௌர்ணமியுடன் சேர்ந்து வருகிறது. அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிமுறை மகாலட்சுமியின் அருளையும், கடாசத்தையும் நமக்கு கிடைக்க செய்யும். அந்த வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புரட்டாசி முதல் நாள் வாங்க வேண்டிய பொருட்கள்

பொதுவாகவே மாதப்பிறப்பு என்பது மிகவும் விசேஷமான ஒன்றாகவே திகழ்கிறது. ஒவ்வொரு மாத பிறப்பின் பொழுதும் சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். அதனால் அன்றைய தினம் மங்களகரமான பொருட்களை வாங்கி வீட்டில் வைத்து சுவாமி படங்களுக்கு மலர்களை சாற்றி வழிபாடு செய்வது என்பது சிறப்பான ஒன்று. அந்த வகையில் புரட்டாசி மாதம் என்பது செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிறக்கிறது. அன்றைக்கு செவ்வாய்க்கிழமை அதோடு சேர்த்து பௌர்ணமியும் கூட. முழு நிலவுடன் பிறக்கக்கூடிய புரட்டாசி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அன்றைய தினம் நாம் வாங்கக்கூடிய பொருட்களின் பலனால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். செல்வநிலை உயரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

வீட்டில் மங்களங்கள் பெருக வேண்டும் என்பதற்காக அன்றைய தினம் மஞ்சள் தூள், விரலி மஞ்சள், குண்டு மஞ்சள் அல்லது சந்தனத்தில் கஸ்தூரி மஞ்சள் போன்ற மஞ்சள் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். அதோடு அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் சந்திரனுக்குரிய அரிசியை வாங்க வேண்டும். குறிப்பாக பச்சரிசி மிகவும் நல்லது. சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்கிறார் என்பதால் கோதுமை வாங்க வேண்டும். தானியமாக வாங்க வேண்டுமே தவிர மாவை வாங்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக அன்றைய தினம் செவ்வாய்க் கிழமையாக இருப்பதால் துவரம் பருப்பை வாங்க வேண்டும். ஒரு சிலருக்கு செவ்வாய்க்கிழமை வாங்கக்கூடிய பொருட்கள் பல்கி பெருகும். அப்படிப்பட்டவர்கள் அன்றைய தினத்தில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கலாம். இதோடு சேர்த்து மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பு, மங்களகரமான பொருட்களில் ஒன்றான குங்குமம் இவற்றையும் வாங்க வேண்டும்.

- Advertisement -

மேற்சொன்ன மங்களகரமான பொருட்களை புரட்டாசி 1ஆம் தேதி பௌர்ணமி திதி ஆரம்பித்த பிறகு வாங்கி வீட்டு பூஜையறையில் வைத்து சுவாமி படங்களுக்கு மலர்களை சூட்ட வேண்டும். அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்வது என்பது அதீத பலனை தரும். நமக்கு தெரிந்த அம்மனின் மந்திரங்கள் அல்லது பாடல்களை கூறியவாறு அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்வது என்பது நம்முடைய வறுமையை போக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:புரட்டாசி முதல் நாள் பணவசியம் ஏற்பட வழிபாடு

இந்த எளிமையான பொருட்களை சிறிதளவு நம்முடைய வீட்டிற்கு நாம் வாங்கி வருவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய வறுமை நிலை மாறும் அளவிற்கு செல்வநிலை உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்