- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி முதல் நாள் பணவசியம் ஏற்பட வழிபாடு

புரட்டாசி முதல் நாள் பணவசியம் ஏற்பட வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக ஒவ்வொரு விதமான கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணம் நம்மிடம் இருப்பதில் பல தடைகள் இருக்கிறது. நம்முடைய உழைப்பிற்கேற்ற பணவரவு ஏற்படாமல் கஷ்டப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். அதே போல் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணம் நம்மிடம் நிரந்தரமாக தங்காமல் போய்விடுகிறது. இவை அனைத்திற்கும் பணவசியம் இல்லாதது தான் காரணமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பண வசியத்தை ஏற்படுத்தவும் பணவரவை அதிகரிக்கவும் புரட்டாசி முதல் நாள் பெருமாள் ஆலயத்தில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையில் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

புரட்டாசி முதல் நாள் பணவசியம் ஏற்பட வழிபாடு

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் பெருமாளுக்காக விரதம் இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். பல வகையான சாதங்களை சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு வைத்து வழிபாடு செய்து ஏழை எளியவர்களுக்கு தானமாக தருவது போன்ற வழிபாட்டு முறைகளையும் பின்பற்றக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். மேலும் புரட்டாசி மாதத்தில் பெருமாளின் ஆலயத்திற்கு சனிக்கிழமை தோறும் சென்று வழிபாடு செய்வது நம்முடைய செல்வ நிலையை உயர்த்தும் என்று பலரும் திருப்பதிக்குச் சென்று வழிபாடு செய்வார்கள். இவ்வளவு சிறப்பு மிகுந்த புரட்டாசி மாதத்தின் முதல் நாளன்று எந்த முறையில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

புதன் கிழமை அல்லது சனிக்கிழமை அன்று பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வோம். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது பெருமாளுக்கு உகந்த மாலை ஆன துளசி மாலை, தாமரை பூ போன்றவற்றை வாங்கித் தந்து வழிபாடு செய்வது உண்டு. அந்த வகையில் புரட்டாசி முதல் நாள் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி உடன் சேர்ந்து வருகிறது. பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பெருமாளுக்கு துளசி மாலையை வாங்கி கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்து முடித்துவிட்டு அங்கு பிரசாதமாக தரக்கூடிய துளசி இலையை வாங்கி வீட்டிற்கு வரவேண்டும்.

வீட்டிற்கு வந்து விளக்கேற்றி வைத்துவிட்டு இந்த துளசி இலையை நம்முடைய வீட்டில் இருக்கும் பெருமாளின் பாதத்தில் வைத்து பிறகு அதை எடுத்து நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பணத்தில் இருக்கக்கூடிய தோஷம் நீங்கும். பண தடை விலகும். இவை இரண்டும் நீங்குவதன் மூலம் பணவசியம் ஏற்பட்டு பணம் நாளா புறமும் நம்மை தேடி வர ஆரம்பிக்கும். நியாயமான முறையில் கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கு அந்த உழைப்பிற்கேற்ற பணம் வரும். மேலும் பண வரவு வருவதற்குரிய பல வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:வாழ்க்கை சிறப்பாக அமைய கிரிவலப் பரிகாரம்

செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய பெருமாள் மற்றும் மகாலட்சுமியை இந்த எளிமையான முறையில் மறவாமல் புரட்டாசி முதல்நாள் வழிபாடு செய்பவர்களுக்கு பணவசியம் ஏற்படுவதோடு பணவரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்