- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீடு கட்ட பிரியாணி இலை பரிகாரம்

சொந்த வீடு கட்ட பிரியாணி இலை பரிகாரம்

- Advertisement -

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் என்னால் சொந்த வீடு கட்டவே முடியாது என்று முடிவு கட்டிவிட்டவர்கள், என்றால் இந்த பரிகாரத்தை செய்யாதீர்கள். என் கையில் பணம் காசு இல்லை, சொத்து சுகம் இல்லை, என்றாலும் என் முயற்சியின் மூலம் நான் நிச்சயம் சொந்த வீடு கட்டியே தீருவேன் என்று உறுதியோடு இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் உதவி செய்யும்.

நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்து இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் நம்பிக்கை தோற்றுப் போகாது. சொந்த வீடு எப்படியாவது கட்டணம், நான் சொந்த வீடு கட்டி விடுவேன் என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -

சொந்த வீடு கட்ட பிரியாணி இலை பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு 7 பிரியாணி இலை தேவை. கிழிசல் இல்லாத கொஞ்சம் முதல் தரமான பிரியாணி இலையை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சிவப்பு நிற ஸ்கெட்ச் பேனா கொண்டு, ‘நான் சொந்த வீடு கட்டி குடியேறி விட்டேன்’ என்று, ஒரு பக்கம் எழுதி விடுங்கள். அதற்கு பின்பக்கம் இன்ஃபினிட்டி என்ற சொல்லப்படும் இந்த சிம்பலை வரைய வேண்டும். 8 படுக்க போட்டது போல் இருக்கக்கூடிய சிம்பல் தான் இன்பினிட்டி சிம்பல். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

சொந்த வீட்டுக்கு சொந்தக்காரனான செவ்வாய் பகவானை, அங்காரகனை, முருகப்பெருமானை நினைத்து இந்த வேண்டுதலை நீங்கள் செய்ய வேண்டும். குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டு பரிகாரத்தை செய்ய துவங்குங்கள். ஏழு பிரியாணி இலையிலும், ஒரே மாறி வாசகத்தை எழுதி விட்டு, ஏழு பிரியாணி இலைக்கு பின்பக்கமும் அந்த சிம்பலை வரைந்து விட்டு இந்த பிரியாணி இலைகளை இரவு தூங்கும் போது உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

- Advertisement -

தூங்கும் போதும் சொந்த வீடு சீக்கிரம் கட்டி விடுவேன் என்ற நம்பிக்கையில் தூங்க செல்லவும். தூங்கும்போது நாம் என்ன வேண்டுதலை வைத்தாலும் அது அப்படியே பலிக்கும். தூங்கும் போதும், கண் விழிக்கும் போதும் நம்முடைய மனது சுத்தமாக இருக்கும். ஆகவே கண் விழிக்கும் போதும் சீக்கிரமாக நான் சொந்த வீடு கட்டி விடுவேன் என்று நம்பி கண் விழியுங்கள்.

இதே போல தொடர்ந்து இந்த வேலையை செய்து வர வேண்டும். காலை எழுந்ததும், தலையணைக்கு அடியில் இருக்கும் பிரியாணி இலையை எடுத்து அலமாரியில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான். 48 நாட்களுக்கு ஒரு முறை பிரியாணி இலையை நெருப்பில் போட்டு பொசிக்க விட்டு, புது பிரியாணியில் எழுதி தலையணைக்கடியில் வைத்து தூங்குங்கள்.

- Advertisement -

வீடு கட்டும் வரை இந்த பரிகாரத்தை நிறுத்தாதீர்கள். இந்த பிரியாணியிலை பரிகாரத்தை செய்ய தொடங்கிய உடனேயே, உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பணத்தை சேர்க்க கூடிய வாய்ப்புகள் கிடைத்துவிடும். பெரிய வருமானத்தில் வேலை கிடைக்கும். பெரிய வருமானம் வரும் அளவுக்கு தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கல்வி ஞானம் செல்வம் பெருகப் புரட்டாசி புதன் வழிபாடு

இப்படி ஏதோ ஒரு நல்லது உங்களுக்கு நடந்து விடும். அந்த நல்லது வராத பணத்தை உங்கள் கைக்கு வர வைக்கும். வராத சொத்து வரும், நிச்சயம் சொந்த வீடு கட்டி விடுவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்