- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉங்கள் கஷ்டத்திற்கு கருட புராணம் கூறும் காரணம்

உங்கள் கஷ்டத்திற்கு கருட புராணம் கூறும் காரணம்

- Advertisement -

இந்து சமய பதினெண் புராண நூல்களில் 17 வது புராணமாக இருப்பது ‘கருட புராணம்’ ஆகும். இதில் விஷ்ணு பகவான் கருடருக்கு ஒரு மனிதன் இறந்த பின்பு அனுபவிக்க கூடிய அத்தனை விஷயங்களை பற்றியும் விளக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்த பின்பு மனிதனுடைய வாழ்க்கை, அவனுக்கு கிடைக்கக் கூடிய தண்டனைகள், ஈம சடங்குகள், மறுபிறவி போன்ற விஷயங்கள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

மனிதனின் முற்பிறப்பு ரகசியங்களை எடுத்து சொல்லக்கூடிய இந்த கருட புராணத்தின்படி ஒரு மனிதன் கஷ்டம் மட்டுமே பட்டுக் கொண்டிருப்பதற்கும், நாய் படாதபாடு படுவதற்கும், என்ன தான் முயற்சி செய்தாலும் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கும் என்ன காரணம்? முற்பிறவியில் அவன் என்னவாக பிறந்திருக்கக்கூடும்? எனும் அதிரவைக்கும் ரகசியத்தை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

முற்பிறவியில் நாம் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப, இப்பிறவியில் பலன்கள் கிடைக்கும் என்பது தான் நம்முடைய இந்து சமயத்தில் இருக்கக்கூடிய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. எல்லா சமயங்களும் இதைத்தான் அறிவுறுத்துகின்றன. இதற்கு கர்மா, விதி என்று ஆயிரம் பெயர் சூட்டி வைத்திருந்தாலும் மாற்ற முடியாதது.

எவ்வளவு உழைத்தாலும் நம்மால் முன்னேறவே முடியவில்லை, கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் தொடர்ந்து கொண்டே வருகிறது, ஒரு துன்பம் போனால் இன்னொரு துன்பம் தயாராக இருக்கிறது. சேமிப்பு என்பதே கிடையாது, எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் செலவுகள் தொடர்கிறது இது போன்ற பிரச்சனை உரியவர்கள், வறுமையும், தரித்திரமும் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் உள்ளவர்கள் அனைவரும் முற்பிறவியில் பெரும் கஞ்சனாக பிறந்திருப்பார்களாம். அவசர தேவைக்கு கூட யாருக்கும் பணம் கொடுத்து உதவி இருக்க மாட்டீர்கள். எச்சை கையால் கூட ஈ ஓட்ட மாட்டார்கள் என்று சொல்லுவார்கள். அது போல மகா கஞ்சனாக இருப்பவர்கள் தான் இப்பிறவியில் பெரும் துன்பத்தை அனுபவிப்பார்கள் என்று கருட புராணம் கூறுகிறது.

- Advertisement -

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் பசி என்று வந்தவர்களுக்கு உணவிருந்தும் உணவளிக்காமல் துரத்தி அடிப்பவர்களாக இருந்திருப்பார்கள் என்று கருட புராணம் குறிப்பிடுகிறது. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறுவார்கள். இல்லாதவர்களுக்கு உதவுவதை தான் கடவுள் விரும்புகிறார். இதை வேண்டுமென்றே இருந்தும் செய்யாமல் உள்ளவர்களை கடவுள் ஒருபோதும் நல்ல நிலையில் வைப்பதில்லை. பசி என்று வந்தவர்களுக்கு ஒருவேளை பசியாற உணவு போடுவது ஒன்றும் யாருக்கும் சிரமமான விஷயம் அல்ல.

இதையும் படிக்கலாமே:
முதல் வாரம் பெருமாள் மந்திரம்

கடும் பசியில் உணவின்றி கேட்டு வந்து நின்றவர்களுக்கு உணவில்லை என்ற துரத்தி அடித்தால், அடுத்த பிறவியில் அவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகாது. கோவில் கோவிலாக ஏறி இறங்கினாலும், மருத்துவமனைக்குச் சென்று செலவழித்து மருத்துவம் பார்த்துக் கொண்டாலும், கர்மம் என்ற ஒன்று உங்களை துரத்திக் கொண்டு தான் இருக்கும். இந்தக் கர்ம வினை பயன்களில் இருந்து மீண்டு நல்ல நிலையை அடைவதற்கு, இப்பிறவியில் தான தர்மங்களை அதிகமாக செய்யுங்கள். தூய உள்ளம் இருந்தாலே வாழ்க்கை வெண்மையாக மாறும். எவரையும் பார்த்து பொறாமைப்படாமல், நாம் என்ன பாவம் செய்தோமோ என்று நம்மை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும். இல்லாதவர்களுக்கும், பசியால் வாடுபவர்களுக்கும் மனமுவந்து மனதார உதவி செய்யுங்கள் போதும், உங்கள் தரித்திர நிலையும் மாறும், புத்திர பாக்கியமும், பெருஞ்செல்வமும் உங்களைத் தேடி வரும்.

சற்று முன்