- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு

- Advertisement -

புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. அதிலும் பெருமாளுக்கு உரிய கிழமையான சனிக்கிழமை அன்று பலரும் ஒரு பொழுது விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்பவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதத்தில் வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் முதல் சனிக்கிழமை அன்று நாம் எப்படி பெருமாளை வழிபட்டால் பெருமாள் மற்றும் மகாலட்சுமி அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு

பொதுவாகவே புரட்டாசி மாதம் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு விரதம் இருப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமை தோறும் ஒரு பொழுது விரதம் இருப்பார்கள். மேலும் அருகில் இருக்கக்கூடிய பெருமாளின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் பலரது வழக்கமாகவே இருக்கும். இன்னும் சிலர் இந்த புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் நடக்கக்கூடிய பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு திருப்பதி பெருமாளை வழிபாடு செய்யும் வழக்கமும் வைத்திருப்பார்கள். இப்படி ஆலயத்திற்கு சென்று வழிபடுபவர்களாக இருந்தாலும் சரி, வீட்டிலேயே வழிபடுபவர்களாக இருந்தாலும் சரி பெருமாளின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் நாம் வழிபாடு செய்வோம். அப்படி பெருமாளின் அருள் கிடைப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறை.

- Advertisement -

சனிக்கிழமை அன்று காலையில் வீட்டில் இருக்கக்கூடிய பெருமாள் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். சந்தனம் வைக்கும் பொழுது அதில் பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் தூள் இவை இரண்டையும் கலந்து வைக்க வேண்டும். அடுத்ததாக பெருமாளுக்கு துளசி மாலை சாற்ற வேண்டும். மேலும் மஞ்சள் நிறத்திலான மலர்களால் ஆன மாலையையும் சாற்றி வேண்டும். பெருமாளுக்கு பிடித்தமான சர்க்கரைப் பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். முக்கியமாக துளசி தீர்த்தம் வைக்க வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று துளசி மாலை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது என்பது சிறப்பு.

வீட்டிலேயே வழிபாடு செய்பவர்கள் அன்றைய தினம் பச்சரிசி மாவில் சிறிது நெய் ஊற்றி வெல்லம் சேர்த்து மாவிளக்காக தயார் செய்ய வேண்டும். ஏழு எண்ணிக்கையில் மாவிளக்கை தயார் செய்து அதில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தில் சிறிதளவு பச்சை கற்பூரத்தையும் சேர்க்க வேண்டும். இப்படி ஏழு மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்து பெருமாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றி வைத்த பிறகு பெருமாளுக்கு உரிய நாமங்களையும், விஷ்ணு சகஸ்ர நாமங்களையும் கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அவரை வணங்குவதோடு சேர்த்து மகாலட்சுமி தாயாரின் ஸ்லோகங்களையும் நாம் கூறி வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணு இருவரும் நம் வீட்டிற்கு எழுந்தருளி அனைத்து விதமான செல்வங்களை வாரி வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மாவிளக்கு தானாக குளிர வேண்டும். மறுநாள் இந்த மாவிளக்கை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக தரலாம் அல்லது பசு மாட்டிற்கு தானமாக தந்து விடலாம்.

இதையும் படிக்கலாமே:புரட்டாசி சனிக்கிழமை நிலைவாசல் பரிகாரம்

மகாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்