நாளைய தினம் புரட்டாசி முதல் சனிக்கிழமையோடு சேர்ந்து சங்கடஹர சதுர்த்தியும் வந்திருக்கிறது. ஆக இந்த நாளில் நாம் பெருமாளையும் விநாயகரையும் சேர்த்து வழிபாடு செய்யப் போகின்றோம். சனிக்கிழமை அன்று விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு சனிபகவானால் ஏற்படக்கூடிய தாக்கங்களும் குறைய போகிறது. ஆக மொத்தம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்.
இப்படி ஒரு நாள் நமக்கு மீண்டும் வருமா என்று சொல்லவே முடியாது. ஆக இந்த நாளில் இறைவழிபாடு செய்ய யாரும் தவற விடாதீர்கள். பெருமாளின் ஆசிர்வாதம் கிடைக்கும் பிள்ளையாரின் ஆசிர்வாதம் கிடைக்கும். சனி பகவானால் உண்டாக்கப்படும் சங்கடங்களும் தீரும்.
புரட்டாசி சனிக்கிழமை நிலை வாசல் பரிகாரம்.
வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கும் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று இறைவழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. கோவிலுக்கெல்லாம் செல்ல முடியாது என்பவர்கள் வீட்டில் இருந்தபடியே மிக மிக சுலபமான முறையில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். விநாயகருக்கு இரண்டு அருகம்புல், பெருமாளுக்கு இரண்டு துளசி இலைகளை மாலையாக கட்டிப் போடுங்கள்.
கட்டாயம் நாளைய தினம் பெருமாளுக்கு முன்பாக ஒரு சின்ன கிண்ணத்தில் பச்சை கற்பூரம் ஒரு துண்டு வைக்க வேண்டும். இது உங்களுடைய பண கஷ்டத்தை அடியோடு நீக்கிவிடும். விநாயகருக்கு போடப்படும் அருகம்புல், சனிபகவானால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும். உங்கள் வீட்டிற்குள் பணம் வருவதற்கு தடையாக இருக்கும் அத்தனை எதிர்மறை ஆற்றலையும் உடைக்கும்.
பூஜை அறையில் இருக்கும் அந்த பச்சை கற்பூரத்தையும், கொஞ்சம் அருகம்புள்ளையும் எடுத்து ஒரு பச்சை நிற துணியில் வைத்து முடிச்சாக கட்டி, நிலை வாசல் படியில் தொங்க விடுங்கள். அவ்வளவுதான்.
வீட்டிற்குள் பணம் வந்து கொண்டே இருக்கும். இதை சனிக்கிழமை அன்று எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். புரட்டாசி மாதம் முழுவதும் இந்த முடிச்சு அப்படியே இருக்கட்டும். புரட்டாசி மாதம் முடிந்ததும் அந்த முடிச்சை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். இந்த ஒரு மாதத்திற்குள் உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டங்களுக்கு எல்லாம் நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, நிறைய வழிகளை பெருமாளும் பிள்ளையாரும் உங்களுக்கு காண்பித்து கொடுப்பாங்க.
இதையும் படிக்கலாமே: தளிகை போடும் வழக்கம் இல்லாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு
அதில் எந்த சந்தேகமும் கிடையாது. வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முயற்சிகளை கைவிடாதீர்கள். தடைகளை தடுப்பதற்கு இந்த எளிய வழிபாடு நாளை உங்களுக்கு கைகொடுக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.