- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி ஞாயிறு பரிகாரம்

புரட்டாசி ஞாயிறு பரிகாரம்

- Advertisement -

கண்ணுக்குத் தெரிந்து உங்களுடைய வீட்டில் ஒட்டடை இல்லை, தூசி தும்பு இல்லை, சுத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைவாக இல்லை. எத்தனை வெளிச்சமாக விளக்கு போட்டாலும், வீட்டில் இருள் சூழ்ந்து இருக்கிறது. வீட்டை விட்டு வெளியில் சென்றால் ஒரு மன அமைதி நிம்மதி இருக்கும். வீட்டிற்குள் வந்தால் மீண்டும் ஏதோ சூனியம் பிடித்தது போல மனதும் உடம்பும் சோர்வடைகிறது.

இதற்கு என்ன காரணம். வீட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் துஷ்ட சக்திகள் தான் காரணம். அந்த நெகட்டிவ் எனர்ஜியை வெளியே துரத்தி அடித்து விட்டாலே போதும். உங்களுடைய வீடு கோவிலாக மாறும். அதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு சின்ன கண்ணாடி பௌல், கொஞ்சம் கல் உப்பு, 1 கண்ணாடி டம்ளர் தண்ணீர், 1 எலுமிச்சம் பழம், இந்த பொருட்கள் தான் தேவை. உங்களுடைய வீட்டின் வரவேற்பறையில் முதலில் கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி, எலுமிச்சம் பழத்தை போட்டு வைத்து விடுங்கள். எலுமிச்சம் பழத்தை கண்ணாடி டம்ளரில் போடும்போது, ‘கோவிந்தா கோவிந்தா கோவிந்தா’ என்ற நாமத்தை கொஞ்சம் உரக்க வாய் விட்டு சொல்லுங்கள்.

அதாவது அந்த நாமம் உங்கள் வீட்டில் இருக்கும் மூலை முடுக்குகளில் எல்லாம் பிரதிபலிக்க வேண்டும். அந்த அளவுக்கு வாய்விட்டு சொன்னால் போதும். அதற்காக மூன்றாவது வீட்டிற்கு கேட்கும் படி சத்தம் போட வேண்டாம். பிறகு ஒரு கண்ணாடி பௌலில் நிரம்ப கல் உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உப்பு போட்டிருக்கும் பவுலை உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளில், தரைப்பகுதியில், எல்லாம் வைத்து வைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

வரவேற்பறை என்றால் நான்கு மூலைகள் இருக்கும். சமையலறை என்றால் நான்கு மூலை. படுக்கையறை என்றால் நான்கு மூலை, இந்த எல்லா மூலைகளிலும் ஒரே பவுலில் போட்ட கல் உப்பை வைத்துவிட்டு, மூன்று முறை கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி, அந்த உப்பை எடுத்து மீண்டும் வேறொரு மூலை வையுங்கள். இதே போல உங்கள் வீட்டில் இருக்கும் மூலை முடுக்குகளில் எல்லாம் இந்த பவுலை வைத்துவிட்டு ‘கோவிந்தா’ என்ற நாமத்தை சொல்லிவிட்டு அந்த பௌலில் இருக்கும் கல் உப்பை எடுத்து தண்ணீரில் கொட்டி கரைந்த பிறகு அந்த தண்ணீரை சிங்கில் கொட்டி விடவும்.

ஒரு அறையில் 4 மூலைகள் இருந்தால், 4 மூலையின் பக்கத்திலும் போய் மூன்று முறை ‘கோவிந்தா’ என்ற கோஷத்தை எழுப்புங்கள். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் வீட்டில் பிரச்சனை உள்ளவர்கள் இதை செய்து விடுங்கள்.

- Advertisement -

கண்ணாடி டம்ளரில் எலுமிச்சம் பழம் போட்டு வைத்திருக்கிறீர்கள் அல்லவா அது ஞாயிற்றுக்கிழமை முழுவதும் உங்கள் வீட்டில் இருக்கட்டும். திங்கட்கிழமை அந்த தண்ணீரை எலுமிச்சம் பழத்தோடு, அப்படியே எடுத்து, அதாவது டம்ளரோடு எடுத்து உங்களுடைய வீட்டின் வெளிப்பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் கொட்டி விடுங்கள்.

திங்கட்கிழமை வீடு முழுவதும் மஞ்சள் தண்ணீர் தெளித்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை சொல்லி பெருமாளை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் எல்லாம் வெளியேறிவிடும்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் செய்ய வேண்டிய பஞ்சமி வழிபாடு

குடும்பத்தில் நல்லது நடக்கும் வீட்டிற்குள் வந்தால் நிம்மதி என்ற மனநிலை ஏற்படும். மிக மிக எளிமையான இந்த பரிகாரத்தை புரட்டாசி மாதத்தில் செய்யும் போது அதி சக்தி வாய்ந்த பலன் உங்களுக்கு தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

சற்று முன்