பெண் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஆண் தெய்வத்தை வழிபாடு செய்வதை விட பெண் தெய்வத்தை வழிபாடு செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்று என்றும் விரைவிலேயே பலனும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் பெண்களுக்கு என்று இருக்கக்கூடிய இலக்கிய மனம் தான். நாம் எவ்வளவுதான் தவறு செய்தாலும் நம்முடைய தாயிடம் அம்மா என்று அழைத்ததும் அவள் நம்முடைய தவறுகள் அனைத்தையும் மறந்து நம்மை வாரி அனைத்து கொள்வாள்.
அதேபோல்தான் பெண் தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் செய்த தவறுகள் அனைத்தையும் பொருத்தருளி நாம் வேண்டிய வரத்தை தருவார்கள். அப்படிப்பட்ட பெண் தெய்வத்தை பெண்கள் வழிபடும் பொழுது அதற்குரிய பலன் என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் பஞ்சமி திதி அன்று பெண்கள் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பெண்கள் செய்ய வேண்டிய பஞ்சமி வழிபாடு
பஞ்சமி திதி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வம் வாராகி அம்மன் தான். பலரும் வாராகி அம்மனை வீட்டில் வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய வாராகி அம்மனின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மனுக்கு உகந்த பொருட்களை வைத்து தீபமேற்றி வாராகி அம்மனின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்வார்கள். இதையும் தவிர்த்து பெண்கள் பஞ்சமி திதி அன்று செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
பெண்கள் வாராகி அம்மனையோ அல்லது மற்ற அம்மனையோ வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அதுவும் பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. இந்த மாதம் பஞ்சமி என்பது ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் பெண்கள் வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்கள் குறிப்பாக மனக்கவலைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வழிபாட்டை வாராகி அம்மனுக்கு தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அருகில் இருக்கக்கூடிய எந்த பெண் தெய்வ ஆலயமாக இருந்தாலும் அந்த ஆலயத்திற்கு ராகு காலத்தில் செல்ல வேண்டும். அங்கு ஐந்து அகல் விளக்குகளை வைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு அந்த அம்மனிடம் உங்களுக்கு இருக்கக்கூடிய மனக்கவலைகள் என்னவோ அதை அனைத்தையும் மனதார கூற வேண்டும்.
பிறகு ஐந்து செட்டு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், மட்டை தேங்காய் போன்றவற்றை எடுத்துச் சென்று அந்த ஆலயத்திற்கு வரக்கூடிய சுமங்கலி பெண்கள் ஐந்து பேருக்கு இதை தானமாக தர வேண்டும். இப்படி நாம் தருவதன் மூலம் அந்த சுமங்கலி பெண்களின் ஒருவராக பெண் தெய்வமே வந்து நம்மிடமிருந்து தாம்பூலத்தை வாங்கி கொள்வார்கள் என்றும் அதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:யோக பஞ்சமி வழிபாடு
மறவாமல் பஞ்சமி திதி அன்று பெண்கள் இந்த முறையில் பெண் தெய்வத்தை தீபமேற்றி வழிபாடு செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.