- Advertisement -

பணத்தடை விலக பரிகாரம்

- Advertisement -

வீட்டிற்குள் பணம் காசு வருவதற்கு தடை. எவ்வளவு வேலை பார்த்தாலும், எவ்வளவு பெரிய தொழில் செய்தாலும், உருண்டு பிறண்டு எழுந்தாலும் வீட்டிற்குள் பணம் காசு வரவில்லை. எதுதான் தடையாக நிற்கிறது என்று தெரியவில்லை. வீட்டில் நிலையாக தங்கி இருப்பது வறுமை மட்டுமே. இந்த பிரச்சனை நாம எல்லாருக்குமே இருக்குங்க.

பணம் காசு வீட்டிற்குள் வருவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். எளிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரம் இந்த பதிவின் மூலம் உங்களுக்காக. தினமும் வாசல் தெளித்து கோலம் போடக்கூடிய மாவு, கோல பொடியாக இல்லாமல், அரிசிமாவாக இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. வெறும் அரிசி மாவில் கோலம் போட்டால் உங்கள் வீட்டிற்குள் பணம் வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

- Advertisement -

உங்களால் வெறும் அரிசி மாவை வைத்து கோலம் போட முடியவில்லை என்றால் அதில் கொஞ்சம் கோலப்பொடியை கலந்து நிலை வாசலில் கோலம் போடுங்கள். நிலை வாசலைக் கூட்டி கொஞ்சம் மஞ்சள் பொடி கலந்த தண்ணீரை வாசல் முழுவதும் தெளித்து, அழகாக கோலம் போட்டு முடித்துவிட்டு இறுதியாக அந்தக் கோலப்பொடியை வைத்து, நிலை வாசலில் ‘ஸ்ரீ’ என்ற வார்த்தையை எழுத வேண்டும்.

இந்த வார்த்தையை எழுதி எல்லோரும் காலில் மிதிக்கலாமா, என்ற கேள்வி நிச்சயம் வரும். எல்லோரும் கால் வைக்கக்கூடிய நடுப்பகுதியில் இந்த வார்த்தையை எழுதாதீங்க. நிலை வாசலுக்கு ஒரு பக்கம், நிலை வாசல் கால், மரத்தில் செய்யப்பட்டது இருக்கும் அல்லவா. அந்த நிலை வாசல் காலுக்கு பக்கத்தில் இந்த வார்த்தையை சின்னதாக எழுதி வையுங்கள்.

- Advertisement -

நிலை வாசலில் இந்த வார்த்தை இருக்கும் பட்சத்தில், வீட்டிற்குள் மகாலட்சுமி நுழைவதற்கு எந்த ஒரு தடையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை இப்படி சிறப்பான நாட்கள் வரும்போது, ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி அதில் குங்குமத்தை தடவி, நிலை வாசலில் இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பெருமாள் தீர்த்தம் மகிமை

இந்த விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் வீட்டில் பணம் நுழைவதற்கு இருக்கக்கூடிய தடை விலகி, பணம் வீட்டுக்குள் அதிகமாக வர தொடங்கும். மிக மிக எளிமையான பரிகாரம். நம்பிக்கையோடு இதை செய்யுங்கள் கூடவே உங்களுடைய முயற்சிகளை கைவிடாதீர்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்