எல்லா பெற்றோர்களுக்கும் தன்னுடைய குழந்தைகள் மீது அதீத அக்கறையும், நம்பிக்கையும் இருக்கும். எப்படியாவது அவர்கள் நன்கு படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று படாதபாடு பட்டு கொண்டிருப்போம். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய எளிய பரிகாரமாக அமைந்திருப்பது வெற்றிலை பரிகாரம். வெற்றிலை பரிகாரம் யாருக்கு எப்படி சாற்ற வேண்டும்? அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பது சில சமயங்களில் மறந்து போய் விடுவது உண்டு. படிக்கும் பொழுதே கவன சிதறல் ஏற்படுவதாலும், தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகும். படிப்பில் நாட்டம் இல்லாமலும், ஒரு சில குழந்தைகள் இருப்பார்கள். கல்வி சார்ந்த உங்கள் குழந்தைகளின் பிரச்சனைகள் தீர்வதற்கு, 9 என்ற எண்ணிக்கையில் வெற்றிலை மாலையை கட்டுங்கள். நல்ல வெற்றிலையாக தேர்ந்தெடுத்து இடைவெளி விட்டு மாலை போல கட்டி செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சநேயர் அல்லது விநாயகருக்கு இம்மாலை சாற்றி தொடர்ந்து வழிபட்டு வர உங்கள் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் சிறப்பாக அமையும். படிப்பில் கவன சிதறல் ஏற்படாது. மாலை சாற்றும் பொழுது உங்களுடைய குழந்தைகளின் கையால் இந்த பரிகாரத்தை செய்ய சொல்லுங்கள்.
படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாமல் இருக்கும் உங்களின் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க 11 என்கிற எண்ணிக்கையில் வெற்றிலையை இடைவெளி விட்டு மாலையாக கோர்த்து விநாயகருக்கு, வியாழன் கிழமை தோறும் சாற்றி வர நல்ல வேலை அமையும்.
வேலை கிடைத்தாலும் ஒரு வேலையிலும் சிலர் நிரந்தரமாக தங்குவது கிடையாது. அடிக்கடி வேலையை பிடிக்கவில்லை என்று மாற்றிக் கொண்டே இருப்பார்கள். மனதிற்கு பிடித்த வேலையை செய்யும் பொழுது தான் அவர்களின் திறமைகளும் வளரும், பணியில் நிம்மதியும் இருக்கும். இப்படியான வேலையில் சென்று அமர விரும்புபவர்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய விரைவில் நற்பலன் கிட்டும்.
திருமணத்தடை, திருமணம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்கள், திருமண தோஷங்கள் உள்ளவர்களும் 21 என்ற எண்ணிக்கையில் கொட்டை பாக்குடன் சேர்த்து இடைவெளி விட்டு வெற்றிலைகளை மாலையாக கோர்த்து அதனை குருவுக்கு உகந்த வியாழன் கிழமையில் அல்லது சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளும் ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து சாற்றி வர வேண்டும். எல்லாம் இருந்தும் திருமணம் தள்ளிப்போகும், சரியான வரன் அமையாமல் இருக்கும் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய இந்த பரிகாரத்தை அவர்களின் கையால் தொடர்ந்து செய்ய சொல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே:
நினைத்தது நடக்க சதுர்த்தி விரதம்
21 வாரங்கள் சனிக்கிழமை அல்லது வியாழன் கிழமையில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்து வர எப்படிப்பட்ட திருமண தடைகளும் உடனடியாக நிவர்த்தி பெறும். மனதிற்கு பிடித்த நல்ல துணை உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை தேடாமலேயே தேடி வரும். வெற்றி தரும் இந்த வெற்றிலை மாலையை இந்த முறையில் நீங்கள் பகவானுக்கு சாற்றி மனதார பிரார்த்தித்துக் கொண்டால் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக மாறும், நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.