- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்தது நடக்க சதுர்த்தி விரதம்

நினைத்தது நடக்க சதுர்த்தி விரதம்

- Advertisement -

எல்லோருக்கும் ஆசைகள் பலவிதமாக இருக்கின்றன. ஒவ்வொருவருக்குமான வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் வெவ்வேறு. நினைத்தது பலிக்க, ஆசைகள் கனவுகள் நிறைவேற சதுர்த்தியை விட சிறந்த நாள் எதுவுமில்லை. சதுர்த்தி அன்று விநாயகருக்கு இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு எண்ணியது எண்ணியபடி நிறைவேறுவதாக ஒரு ஐதீகம் உண்டு. அதைப் பற்றிய சுவாரசிய தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சங்கடங்களை தீர்ப்பவர், சங்கடஹர சதுர்த்தியில் அருள் புரிபவர் விநாயகர். இந்த சதுர்த்தி நாளில் பொதுவாக விநாயகர் வழிபாடு மேற்கொள்வது வழக்கம். நம் கஷ்டங்களை எல்லாம் நீக்கி எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்ற, இந்த சதுர்த்தி தினத்தில் அரிசி மாவில் பிள்ளையார் பிடித்து வையுங்கள். விநாயகருக்கு உகந்த கொழுக்கட்டை, சுண்டல், பாயாசம் ஆகியவற்றை செய்து ருசி பார்க்காமல் படைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபட்டால் மலை போல வந்த துன்பமும் பனி போல நீங்கும். எருக்கம் பூ மாலை ஒன்றை சாற்ற, மனதில் எண்ணிய ஆசைகள் அப்படியே நிறைவேறும். எருக்கம் பூ மாலை நீங்களே உங்கள் கைகளால் கோர்த்துக் கொள்ளுங்கள். வெள்ளருக்கு மாலை சாற்றுவது இன்னும் சிறப்பானது. வெள்ளருக்கு பூவினால் மாலை கோர்த்து, உங்கள் கைகளாலேயே விநாயகருக்கு போட்டு, கீழ் வரும் இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.

கணபதி மந்திரம்:
கஜானனம் பூத கனாதி சேவிதம்
கபித்த ஜம்பு பலசார பக்ஷிதம்
உமா சுதம் சோக வினாஷ காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்

- Advertisement -

மந்திரத்தை சொன்ன பிறகு மனதார இறைவனிடம் உங்களுடைய ஆசைகளை பிரார்த்தனையாக வையுங்கள். எப்பொழுதும் கடவுளிடம் பிரார்த்திக்கும் பொழுது இரு கைகளை கூப்பி கண் குளிர தரிசிக்க வேண்டும், ஆனால் வேண்டுதல் வைக்கும் பொழுது அப்படி அல்ல! இரு கைகளையும் ஒன்று சேர்த்து யாசிக்கும் படி இறைவனை பார்த்தவாறு கைகளை நீட்டி வழிபட வேண்டும். உங்கள் ஆசைகளை விநாயகரிடம் வைத்துவிட்டு தோப்புக்கரணம் போடுங்கள். பின்னர் முச்சந்திக்குச் சென்று சிதறு தேங்காய் ஒன்றை உடையுங்கள். உங்கள் வேண்டுதல்கள் பலிக்க, தடைகள் எதுவும் வராமல் இருக்க இந்த சிதறு தேங்காய் உடைப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:
பணம் தரும் வெற்றிலை மந்திரம்

பின்னர் மாலை வேளையில் விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கு சதுர்த்தி வழிபாட்டினை மேற்கொண்டு விளக்கேற்றி விட்டு வீட்டிற்கு வந்து பிடித்து வைத்த பிள்ளையாரை ஓடும் நீரில் கரைத்து விடுங்கள். அன்றைய நாள் எறும்புகளுக்கு வெல்லத்துடன் கலந்த பச்சரிசி மாவை வையுங்கள். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு சதுர்த்தி திதி அன்றும் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு, கடுமையான ஆசைகளும், கடுமையான வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் கூட எளிதாக நிறைவேறும். தடைகளை தாண்டி நீங்கள் வேண்டியதை அடைய இதை விட ஒரு நல்ல நாள் இருக்க முடியாது. சங்கடங்கள் தீர்ந்து, உடலில் ரோகங்கள் குறைந்து, மனதில் சோகங்கள் மறைந்து, எண்ணியது அடைவதற்கு எம்பெருமான் விநாயகர் உங்களுக்கு அருள் புரிவாராக.

சற்று முன்