திடீரென்று அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும். உடனடியாக நம்முடைய சாதாரணமான வாழ்க்கை ராஜ வாழ்க்கையாக மாற வேண்டும். இந்த அளவுக்கு ஆடம்பர வாழ்க்கை நமக்கு எப்படி கிடைத்தது என்று யாருக்கும் தெரியக்கூடாது. அந்த அளவுக்கு ரகசியமான ஒரு பரிகாரம் தான் இது. நாளை வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை என்றாலே அது சுக்கிர பகவானுக்கு உரிய கிழமை.
சுக்கிர ஜெயந்தியும் நாளை இருக்கிறது. சுக்கிர பகவானுக்கு நாளைய தினம் பிறந்தநாள். இந்த நாளில் மகாலட்சுமி வழிபாடு சிறப்பான பலனை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் புரட்டாசி மாதம் வந்திருக்கக்கூடிய இரண்டாவது வெள்ளிக்கிழமையும் இது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வெள்ளிக்கிழமை பூஜையோடு சேர்த்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள்.
சுக்கிர பகவானின் அனுகிரகத்தால் உங்களுக்கு சீக்கிரம் சுக்கிர யோகம் கிடைக்கும். இன்றிலிருந்து துவங்கி தொடர்ந்து 48 நாட்கள் இந்த மந்திரத்தை தினம்தோறும் உச்சரிப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் அல்ல, பேர் அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. சரி அந்த மந்திரம் என்ன அதை எந்த நேரத்தில் எப்படி உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
ஆர்வத்தை அதிகப்படுத்தாமல் முதலில் அந்த மந்திரத்தை பார்த்து விடுவோம். பின் சொல்லப்பட்டிருக்கும் இந்த மந்திரத்தை தான் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பூஜை அன்று உச்சரிக்க வேண்டும்.
சுக்கிரன் மந்திரம்
ஓம் ட்ராம் ட்ரீம் ட்ரோம் சஹ சுக்ராய நமஹ
மந்திரம் இவ்வளவுதான். வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை காலை 6 – 7 மதியம், மதியம் 1 – 2 இரவு 8 – 9 இதுதான். வெள்ளிக் கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரை. இந்த நேரத்தில் பூஜை அறையில் ஒரு நெய் விளக்கு ஏற்றி வைக்கவும். மண் அகல் விளக்கில் நெய் விளக்கு ஒன்று ஏற்றி வைத்துவிட்டு, சாதாரணமாக உங்கள் வீட்டில் என்னென்ன விளக்கு எல்லாம் ஏற்றுவீர்களோ, அதை எல்லாம் ஏற்றி வையுங்கள் மகாலட்சுமிக்கு அலங்காரம் செய்யுங்கள்.
உங்களால் முடிந்த நெய்வேதியத்தை வைத்துவிட்டு பிறகு இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்க வேண்டும். மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு கற்பூர ஆராத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
40 நாளில் எவர் ஒருவர் இந்த மந்திரத்தை 20 ஆயிரம் முறை உச்சரிக்கிறீர்களோ அவர்களுக்கு இந்த மந்திரம் சித்தியாகி அவர்களுக்கு உண்டான பணக்கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து, சுக்கிர யோகம் அடிக்க தொடங்கிவிடும். வருமானத்திற்கு மேல் வருமானம் வரத் தொடங்கும். கடன் பிரச்சனைகள் எல்லாம் தீரும்.
சுகபோக வாழ்க்கையை வாழ்வதற்கு உண்டான வசதிகள் உங்களுக்கு தானாக கிடைத்துவிடும். பிறகு என்ன ராஜபோக வாழ்க்கை தான். மேலே சொன்னபடி சுக்கிர ஹோரையில் மூன்று மணி நேரமும் உங்களால் இந்த மந்திரத்தை சொல்ல முடியும் என்றாலும் சொல்லலாம். மந்திரத்தை இத்தனை முறைதான் சொல்ல வேண்டும் ஒரு நாளைக்கு என்ற கணக்கெல்லாம் கிடையாது.
இதையும் படிக்கலாமே: கடன் அடைய மழை நீர் பரிகாரம்
இந்த மந்திரத்தை திரும்பத் திரும்ப முழுமூச்சோடு சொல்வதற்கு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது என்றாலே சுக்கிர யோகம் உங்களுக்கு அடித்து விட்டது என்றுதான் அர்த்தம். நாளைய தினம் அதி அற்புதம் வாய்ந்த இந்த நாளில் சுக்கிர பகவானை வழிபாடு தவறாதீர்கள். இன்றைய சூழ்நிலையில் பொருளாதார வீழ்ச்சியில் இருப்பவர்களை முன்னுக்குக் கொண்டு வர கூடிய ஒரே ஆயுதம் இந்த ஆன்மிகம் சார்ந்த பரிகாரங்கள் மட்டும்தான். நம்பிக்கை இருந்தால் இதை முயற்சி செய்து பலன் பெறவும்.