நாளைய தினம் ஆயில்ய நட்சத்திரத்தோடு சேர்ந்து புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை வந்திருக்கிறது. இந்த நாளில் ஏகாதிசி திதியும் இருப்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, கணவன் மனைவி, மகாலட்சுமி மகாவிஷ்ணுவை போல, ஒற்றுமையாக அன்யூனியமாக வாழ இந்த வழிபாடு கை கொடுக்கும்.
சண்டை சச்சரவால் பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேரவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளைய தினம் வீட்டிலிருந்தபடியே குடும்ப சுபிட்சத்திற்கு என்ன வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
கணவன் மனைவி ஒற்றுமைக்கு பெருமாள் மந்திரம்
நாளை காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக கூட்டிவிட்டு, வாசலில் செம்மண் தீட்டி கோலம் போட வேண்டும். பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் செம்மண் கோலம் போடுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. பிறகு உங்களால் முடியும் என்றால் மாவிளக்கு தயார் செய்து அந்த விளக்கை ஏற்றும் போது இந்த மந்திரத்தை சொல்லலாம்.
முடியாது என்பவர்கள் பெருமாள் முன்பு சாதாரணமாக உங்கள் வீட்டில் எப்போதும் ஏற்றும் காமாட்சியம்மன் விளக்கு, குத்துவிளக்கு, நீங்கள் எது ஏற்றுவீர்களா அந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, ஸ்ரீரங்கத்து பெருமாளை மனதார நினைத்து ‘ஓம் ஸ்ரீ ரங்கநாதா போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
ஸ்ரீ என்பது மகாலட்சுமியே குறிக்கக்கூடியது. ரங்கநாதர் என்னும் பெயர் பெருமாளை குறிக்கக் கூடியது. இவர்கள் இருவரும் ஒருசேர இருக்கும் காட்சியை மனதில் நிறுத்தி இந்த வழிபாட்டை மேற்கொண்டால், நிச்சயம் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். இந்த பூஜையை கணவன் மனைவி சேர்ந்துதான் செய்ய வேண்டும். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
இந்த பூஜையில் இன்னும் இன்னும் உங்களுக்கு 100 மடங்கு பலன் கிடைக்க வேண்டும் என்றால் கணவன் மனைவியும் சேர்ந்து பச்சரிசியை இடித்து, பச்சரிசி மாவு எடுத்து அதில் மாவிளக்கு பிசைந்து இருவரும் சேர்ந்து விளக்கு போட்டு இந்த வழிபாட்டை செய்வது உங்கள் குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. கணவன் மனைவி அன்யூனயத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் பிரிந்து இருக்கக்கூடிய கணவனோ அல்லது மனைவியோ தங்கள் கையால் பச்சரிசியை இடித்து பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு நாளைய தினம் வேண்டுதல் வைத்தால், நிச்சயம் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். கணவன் மாவு இடித்து மாவிளக்கு போடுவதா என்றெல்லாம் சிந்திக்காதீர்கள்.
இதையும் படிக்கலாமே: பற்றி எரியும் கடன் பிரச்சனையை தீர்க்க பெருமாள் வழிபாடு
உங்கள் மனைவியோடு சேர வேண்டும் என்ற ஆசை இருந்தால் உங்கள் அம்மாவின் உதவியோடு, அல்லது சகோதரிகள் உதவியோடு இந்த வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். இந்த வருடம் பெருமாளுக்கு கணவன் மனைவியாக தனித்தனியாக இருந்து மாவிளக்கு போட்ட நீங்கள், அடுத்த வருடம் ஒன்றாக சேர்ந்து தம்பதி சரீரமாக மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.