நிறைய பேருக்கு மாத கடைசியில் கையில் பணம் இருக்காது. அடுத்த மாதம் சம்பளம் வந்தா தான் பணம் என்ற சூழ்நிலை இருக்கும். வெறும் கையோடு இருப்பார்கள், செலவுக்கு 500 ரூபாய் கிடைத்தால் பரவாயில்லை. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கலாம் என்ற சூழ்நிலை நிலவும். அதாவது அன்றாட வாழ்விற்கே பால் காய்கறி போன்ற பொருட்களை வாங்க கூட சில பேருக்கு, மாத கடைசியில் காசு இருக்காது.
இப்படிப்பட்டவர்களுடைய சூழ்நிலை மாற வேண்டும். கைக்கு கைக்கு வருமானம் வந்து கொண்டே இருக்க வேண்டும். சில்லறை செலவுகளை சமாளிப்பதற்கு கூட வழியில்லை என்ற சூழ்நிலை வரவே கூடாது என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இது ஒரு சின்ன முயற்சி தான். நம்பிக்கையோடு செய்து பணம் வந்தால் நிச்சயம் சந்தோஷம் தானே. நிறைய பணம் காசு செலவு செய்ய வேண்டாம். ஒரே ஒரு வெற்றிலை கொஞ்சம் ஜவ்வாது கிடைத்தாலும் போதும். இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு பாட்டில் ஜவ்வாது வாங்கினால் அதை நீண்ட நாட்களுக்கு வைத்து நம்மால் பயன்படுத்த முடியும்.
அவசர தேவைக்கு பணம் தரும் மந்திரம்
காசு தேவைப்படும்போது பூஜை அறையில் அமர்ந்து முருகரை நினைத்து குலதெய்வத்தை நினைத்து வெற்றிலையில் கொஞ்சம் ஜவ்வாது பூசி மடித்துக் கொள்ளுங்கள். முருகப்பெருமானே எனக்கு வெற்றியை கொடு, செல்வத்தை கொடு என்று வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு இந்த வெற்றிலையை கையில் வைத்துக்கொண்டு ‘ஸ்ரீ ரூராய ரூராய சக்தி’ என்ற மந்திரத்தை மனதார 108 முறை சொல்லலாம். நேரம் இல்லை.
அவ்வளவு முறை எல்லாம் மந்திரத்தை சொல்ல முடியாது என்பவர்கள் 27 முறை மந்திரத்தை சொல்லி இந்த வெற்றிலையை அப்படியே மன்னித்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவசர தேவைக்கு, தேவையான அளவு பணமானது உங்களுக்கு கிடைக்கும். இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்த வெற்றிலையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். அந்த இரண்டு மூன்று நாட்களுக்கு உங்களுக்கு பணத்திற்கு பஞ்சமே வராது பார்த்துக் கொள்ளுங்கள்
ஏதாவது ஒரு ரூபத்தில் கடவுள் உங்களுக்கு வருமானத்தை கொடுத்து விடுவான். எந்த வேலையையும் பார்க்காமல் வெறுமனே சும்மாவே வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் வேலை செய்யாது. எல்லா வேலையும் செய்கின்றோம். இருந்தாலும் பண பற்றாக்குறை இருக்கிறது. நேரத்திற்கு பணம் கைக்கு வரமாட்டேங்குது என்பவர்கள் இதை செய்யலாம்.
இதை செய்பவர்கள் லட்சமாக சம்பாதிப்பீங்க உடனே கோடீஸ்வரராக மாறிடுவீங்க அப்படி என்பது நிச்சயம் அத்தமே கிடையாது. இன்றைய சூழ்நிலைக்கு இன்றைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள டக்குனு இந்த பரிகாரத்தை செய்தால், உடனடியாக பணத்தை கைக்கு இந்த பிரபஞ்சம் கொண்டு வந்து தரும் என்பதும் சந்தேகமே கிடையாது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் மிளகு பரிகாரம்
முருகப்பெருமானும் உங்களை கைவிடமாட்டார். மகாலட்சுமி தேவியும் உங்களை கைவிடமாட்டார். வெற்றிலை வெற்றியை மட்டும் தான் கொடுக்கும். நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.