- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் மிளகு பரிகாரம்

கடன் தீர்க்கும் மிளகு பரிகாரம்

- Advertisement -

பொதுவாக இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கடனை வாங்குவதும், அந்த கடனை திருப்பிக் கொடுப்பதும் சர்வ சாதாரண விஷயமாக இருக்கிறது. நாம கூட தேவைக்கு ஏற்ப கடனை வாங்குவோம். திருப்பி அடைப்போம். ஆனால் ஒரு சில நேரத்தில் வாங்கக்கூடிய கடன் மட்டும், அப்படியே நின்றுவிடும். அந்த கடனுக்கு வட்டியும் கட்ட முடியாது.

அந்த கடனுக்கான அசலையும் நம்மால் திருப்பி தர முடியாது. இதை கடுமையான கடன் பட்டியலில் வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கும் இதுபோல ஏதாவது ஒரு கடன் பிரச்சனை இருக்கிறது என்றால், இன்றைய நாளில் சிவபெருமானை நினைத்து இந்த ஒரு பொருளை கையில் வைத்துக்கொண்டு, வேண்டுதல் வைத்து பாருங்கள். திருப்பி அடிக்கவே முடியாத குறிப்பிட்ட அந்த கடுமையான கடனை அடைக்க கூடிய சூழ்நிலையை சிவபெருமான் உங்களுக்கு காட்டி கொடுப்பார்.

- Advertisement -

கடன் தீர பிரதோஷ பரிகாரம்

இன்று சோமவார பிரதோஷம். மகாலய பட்சத்தில் வந்திருக்கக்கூடிய பிரதோஷம். அது மட்டுமில்லாமல் இன்றைய நாளில் மாத சிவராத்திரி திதியும் இருக்கிறது. இத்தனை அம்சங்களும் சேர்ந்து இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த இந்த நாளில் சிவபெருமானின் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும். இன்று மாலை 4:30 – 6:00 மணி வரை பிரதோஷ நேரம். இந்த நேரத்தை தவற விடாதிங்க. நீங்க கோவிலில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்யலாம்.

முதலில் 27 மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். இன்று பிரதோஷ நேரத்தில் நீங்கள் வீட்டில் இருந்தால் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு, சிவபெருமானை மனதார நினைத்து 27 மிளகு கையில் வைத்துக்கொண்டு, ‘ஓம்’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். அவசர அவசரமாக ஓம் மந்திரத்தை சொல்லக்கூடாது. ஓஓஓஓம்ம்ம்ம் ரீங்கார ஓலிக்கும் அல்லவா, மெதுவாக ஒவ்வொரு முறை ஓம் சொல்லும் போதும் அதற்கான சரியான நேரத்தை எடுத்துக்கொண்டு, இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

நன்றாக ராகத்தோடு இழுத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நீங்கள் சொல்லுவது பிரபஞ்சத்தில் இருக்கும் எம்பெருமானது செவிகளை எட்ட வேண்டும். ரொம்பவும் சத்தம் போட்டு சொல்ல வேண்டும் என்பது அர்த்தம் அல்ல. உங்களுடைய மூச்சை நன்றாக உள்வாங்கி, மூச்சை நன்றாக வெளிவிட்டு சொல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு, கையில் இருக்கும் மிளகை ஒரு மஞ்சள் துணியில் போட்டு முடிச்சாக கட்டி நிலை வாசலில் மாட்டிவிடுங்கள். என்னுடைய கடன் பிரச்சனைசீக்கிரம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த பரிகாரத்தை செய்தீர்கள் என்றால் நிச்சயம் அடுத்த பிரதோஷம் வருவதற்குள் உங்களுக்கான கடன் பிரச்சனை தீர்வதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

ஒருவேளை நீங்கள் கோவிலுக்கு செல்கிறீர்கள் என்றால், 27 மிளகை மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து ‘ஓம்’ என்ற இந்த பிரணவ மந்திரத்தை 27 முறை சொல்லி அந்த முடிச்சை அப்படியே வீட்டுக்கு கொண்டு வந்து நிலை வாசல் படியில் மாட்டலாம். மிக மிக எளிமையான சக்தி வாய்ந்த பரிகாரம் இது.

மிளகுக்கு கடனை அடைக்க கூடிய, கர்மாவை கரைக்கக் கூடிய சக்தி இருக்கிறது. அதேபோலதான் சிவபெருமானுக்கும் நம்முடைய பிறவி கடனை தீர்க்கக் கூடிய சக்தி இருக்கிறது. இந்த இரண்டும் ஒன்று சேரும்போது பலன் நிச்சயம் இரட்டிப்பாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: அறியாமல் செய்த பாவத்தையும் நீக்கும் அற்புத ஸ்தலம்

இந்த கட்டிய முடிச்சை 48 நாட்கள் கழித்து கழட்டி கொண்டு போய் ஓடும் தண்ணீரில் போட்டு விடலாம். கிணற்றில் போடலாம். எதுவுமே இல்லை என்றால் உங்கள் வீட்டில் செடி கொடிகளுக்கு அடியில் இருக்கும் மண்ணை தோண்டிவிட்டு மிளகை புதைத்து விடுங்கள். இந்த எளிமையான பரிகாரம் நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு நல்லது செய்யும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்