- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுலதெய்வ அருள் கிடைக்க மஹாளய அமாவாசை பரிகாரம்

குலதெய்வ அருள் கிடைக்க மஹாளய அமாவாசை பரிகாரம்

- Advertisement -

முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கு உதவக்கூடிய தினமாக திகழ்வதுதான் புரட்டாசி அமாவாசை. இதை மஹாளய அமாவாசை என்று கூறுவோம். இந்த அமாவாசை அன்று முன்னோர்களின் அருளை பெறுவதோடு குலதெய்வத்தின் அருளையும் பெறுவதற்கு சில எளிமையான பரிகாரங்கள் இருக்கின்றன. அந்த பரிகாரங்களில் ஒன்றை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மஹாளய அமாவாசை பரிகாரம்

பொதுவாக குலதெய்வ வழிபாட்டை பௌர்ணமி அமாவாசை தினங்களில் மேற்கொள்வது என்பது சிறப்பு. அதிலும் குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய பரிகாரங்களை அன்றைய தினத்தில் மேற்கொண்டோம் என்றால் அதற்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அமாவாசையில் சிறப்பு மிகுந்ததாக திகழக்கூடிய இந்த புரட்டாசி அமாவாசை அன்று நாம் செய்யக்கூடிய பரிகாரத்திற்கு அதிக அளவில் பலன் கிடைக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை அமாவாசைக்கு முதல் நாள் செய்ய வேண்டும். முதல் நாள் இரவு படுக்கச் செல்வதற்கு முன் பூஜை அறையில் சில குறிப்பிட்ட பொருட்களை எடுத்து வைக்க வேண்டும். மறுநாள் அமாவாசை தினத்தன்று சாதாரணமாக எப்பொழுதும் போல் வழிபாடு செய்தால் போதும். இதற்கு முதல் நாள் அதாவது அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மேல் ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் உங்களுடைய கைப்பிடி அளவு ஒரு கைப்பிடி பச்சரிசியை வைக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அடுத்ததாக அதில் ஒரே ஒரு விரலி மஞ்சள் வைக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் தங்கம் அல்லது வெள்ளி எது இருக்கிறதோ இவை இரண்டில் ஏதாவது ஒன்றையாவது அதனுடன் சேர்த்து வைக்க வேண்டும். அடுத்ததாக இதனுடன் தாமரை மணிமாலை, ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை அல்லது ருத்ராட்சம் என்று ஜெபத்திற்கு உபயோகப்படுத்தக்கூடிய எந்த மாலையாக இருந்தாலும் அந்த மாலையையும் அதில் வைத்து மூட்டையாக கட்டி குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

குலதெய்வம் தெரியாது என்பவர்கள் அவர்களுடைய இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் எப்பொழுது போல் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிடுவோம் அல்லவா அப்படியே சுவாமி கும்பிட்டு முடித்து பிறகு இந்த மூட்டையை எடுத்து இதில் இருக்கக்கூடிய பச்சரிசியை அரிசி பாத்திரத்தில் சேர்த்து விட வேண்டும். ஒரு ரூபாயையும் தங்கத்தையும் தங்கம் வெள்ளி வைத்திருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். ஜெபமாலையை பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

அந்த மஞ்சள் துணியிலேயே மீதம் இருக்கும் விரலி மஞ்சளை கட்டி வீட்டின் நிலை வாசலில் கட்டிவிட வேண்டும். அடுத்த அமாவாசை தினத்தன்று இந்த விரலி மஞ்சளை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளும் இஷ்ட தெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெறும். மேலும் உண்ண உணவிற்கு எந்த குறையும் இருக்காது. பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். தங்கம் வெள்ளி தாராளமாக வந்து சேரும். வீட்டிற்குள் எந்தவித எதிர்மறை ஆற்றல்களும் நுழையாது. நாம் செய்யக்கூடிய பூஜைகள் முழுமையாக வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே: மகாளய அமாவாசை அன்று திதி கொடுக்க இயலாதவர்கள் செய்ய வேண்டிய காரியம்

சிறப்பு மிகுந்த எளிமையான பரிகாரங்களை அதற்குரிய நாட்களில் செய்யும் பொழுது அதன் பலன் இன்னும் அதிகமாக கிடைக்கும். முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை அமாவாசைக்கு செய்து அனைத்து விதமான பலன்களையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்