- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமகாளய அமாவாசை அன்று திதி கொடுக்க இயலாதவர்கள் செய்ய வேண்டிய காரியம்

மகாளய அமாவாசை அன்று திதி கொடுக்க இயலாதவர்கள் செய்ய வேண்டிய காரியம்

- Advertisement -

மகாளய பட்சம் என்று அழைக்கக்கூடிய 15 நாட்களும் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். திதி கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி அந்த 15 நாட்களும் செய்ய இயலாதவர்கள் மகாளய அமாவாசை அன்று கண்டிப்பான முறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து அவர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய முன்னோர்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களின் சாபம் நீங்கும் என்று கூறப்படுகிறது. ஒரு வேலை அன்றைய தினத்திலோ அல்லது இந்த 15 நாட்களோ தர்ப்பணம் கொடுக்க இயலவில்லை, திதி தர முடியவில்லை, அமாவாசை அன்று படையல் இட்டு முன்னோர்களை வழிப்பட இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் எந்த காரியங்களை செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாளய அமாவாசை அன்று திதி கொடுக்க வழிபாடு

பொதுவாகவே அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. அப்படி ஒவ்வொரு மாதமும் செய்ய இயலாதவர்கள் தை அமாவாசை, முக்கியமாக புரட்டாசி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்து முன்னோர்களுக்கு பிடித்தமான பொருட்களை படையல் இட்டு விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி இந்த காரியத்தை செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய காரியத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

எந்தவித திதியும் படையலும் கொடுக்க இயலவில்லை என்றாலும் மகாளய அமாவாசை அன்று காலையிலும் மாலையிலும் வீட்டில் இருக்கக்கூடிய முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து அவர்களுக்கு சந்தனம் குங்குமம் வைத்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு அந்த தீபத்திற்கு அருகில் ஒரு டம்ளர் நிறைய தண்ணீரை வைத்து அவர்களை வழிபாடு செய்யலாம். அடுத்ததாக நிலை வாசலுக்கு வெளியே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அதனுடன் ஒரு டம்ளர் நிறைய தண்ணீரையும் வைத்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அன்றைய தினத்தில் பிராமினருக்கு உணவு தானம் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் பாகற்காய், வாழைக்காய், பலாக்காய், பிரண்டை போன்ற பொருட்களை தானமாக தருவதன் மூலமும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற முடியும். அன்றைய தினத்தில் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று குலதெய்வத்தை வழிபாடு செய்தாலும் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். புனித ஆறுகள், தீர்த்தங்கள் போன்றவற்றில் நீராடுவதும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறச் செய்யும்.

- Advertisement -

இவை அனைத்தையுமே செய்ய இயலவில்லை என்பவர்கள் காலையிலும் மாலையிலும் தங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் 10 நிமிடமாவது அமர்ந்து முன்னோர்களை நினைத்து தியானம் செய்தாலே முன்னோர்களின் அருள் கிடைக்கும். அதே போல் முகம் தெரியாத ஏழை எளியோருக்கு தங்களால் இயன்ற அளவு அன்னதானம் செய்வதும் முன்னோர்களின் சாபத்திலிருந்து நீங்க பெற்று அவர்களின் ஆசீர்வாதத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் வெள்ளை மிளகு பரிகாரம்
மேற்சொன்ன இந்த காரியங்களில் எதை உங்களால் செய்ய இயலுமோ அதை செய்து முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெறுங்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்