- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமூன்றாம் பிறையுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறை

மூன்றாம் பிறையுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறை

- Advertisement -

நவராத்திரியின் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறையுடன் சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளில் வராகி அம்மனை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதோடு நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறவும் அதேசமயம் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையவும் உதவி செய்யும். அப்படிப்பட்ட ஒரு வழிப்பாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவராத்திரி என்றாலே அது அம்மனுக்குரிய திருவிழாவாக கருதப்படுகிறது. மேலும் வெள்ளிக்கிழமையும் அம்மனுக்குரிய வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து வருவதோடு மூன்றாம் பிறையும் அதாவது சந்திர தரிசனமும் சேர்ந்து வருவது என்பது அபரிவிதமான பலனை தரக்கூடியதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அன்றைய நாளில் வராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம். காலை 6 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்யலாம். ராகு காலமான 10:30 மணியில் இருந்து 12 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை நேரத்தில் 5:30 மணிக்கு மேல் தங்களால் இயன்ற நேரத்தில் செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு முதலில் ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் அரிசியை பரப்ப வேண்டும். பிறகு வாசனை மிகுந்த உதிரி பூக்களை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே வேப்பிலை, வெற்றிலை, அருகம்புல், மாயிலை, வில்வ இலை இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு மேலே பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற நிறத்திலான கண்ணாடி வளையலை வைத்துக்கொள்ள வேண்டும். ஆறு என்ற எண்ணிக்கையில் வாங்கி வைத்துக் கொள்வது என்பது சிறப்பு. பச்சை நிற வளையலை வைத்தால் பணவசியம் ஏற்படும். மஞ்சள் நிற வளையலை வைத்தால் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சிவப்பு நிற வளையலை வளர்த்தால் எதிரிகள் தொல்லை நீங்கும், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மூன்று நிறங்களிலும் வளையலை வாங்கி வைத்துக் கொள்ளலாம். தங்களுடைய வேண்டுதலுக்கு ஏற்ற நிறத்தில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதற்கு நடுவே மஞ்சளில் பிள்ளையார் பிடிப்பது போல் வராகி அம்மனை பிடித்து வைத்து குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது வராகி அம்மனுக்கு செவ்வரளி, செம்பருத்தி, மல்லிகைப்பூ இந்த மூன்று மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். தங்களால் இயலும் பட்சத்தில் வேப்பிலை மாலை, மஞ்சள் மாலை, ஏலக்காய் மாலை, கிராம்பு மாலை என்று ஏதாவது ஒரு மாலையை சாற்ற வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக அம்மனுக்கு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நவதானியங்களை பரப்பிக் கொள்ளுங்கள். நவதானியம் கிடைக்காத பட்சத்தில் வெள்ளை மொச்சை பரப்பிக் கொள்ளலாம். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய நாளில் மாதுளம் பழம், சுண்டல் வகைகள், பானகம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அடுத்ததாக வராகி அம்மனின் பின்வரும் மந்திரங்களை 33 முறை உச்சரிக்க வேண்டும். இயன்றவர்கள் இந்த மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது குங்கும அர்ச்சனை செய்யலாம், மஞ்சள் அர்ச்சனை செய்யலாம் அல்லது மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

இப்படி செய்து முடித்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். மறுநாள் சனிக்கிழமை அன்று இதில் இருக்கக்கூடிய வளையலை எடுத்து வீட்டில் இருக்கும் பெண்கள் அணிந்து கொள்ளலாம், மஞ்சளை தனியாக எடுத்து வைத்து அதை தினமும் நெற்றியில் வைத்துக்கொள்ளலாம். பெண்கள் தங்களுடைய முகத்தில் பூசி குளித்துக் கொள்ளலாம். மற்ற பொருட்களை கால் படாத இடத்திலோ ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும். இயன்றவர்கள் அருகில் பாம்பு புற்று இருக்கும் ஆலயத்திற்கு சென்று அந்த புற்றிற்கு பால் வாங்கிக் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

மந்திரம்

ஓம் ஐம் க்ளெளம் பஞ்சமியை நமஹ .
ஓம் ஐம் க்ளெளம் தண்டநாதாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் சங்கேதாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் சமயேஸ்வரியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் சமயசங்கேதாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் வாராஹியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் போத்ரிணியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் சிவாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் வார்த்தாளியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் மஹாசேனாயை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் ஆக்ஞாசக்ரேஸ்வரியை நமஹ.
ஓம் ஐம் க்ளெளம் அரிக்னியை நமஹ.

இதையும் படிக்கலாமே:

நவராத்திரி சமயத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று இந்த முறையில் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு வாராகி அம்மனின் அருளால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்