- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி 3வது சனிக்கிழமை வாங்க வேண்டிய பொருள்.

புரட்டாசி 3வது சனிக்கிழமை வாங்க வேண்டிய பொருள்.

- Advertisement -

நாளை புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை. நவராத்திரியோடு சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். நாளைய தினம் மூன்றாவது சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டை எப்படி செய்தால் கடன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என்பதை பற்றிய எளிமையான ஒரு ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

நாளைய தினம் உங்களுடைய வீட்டில் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு, பெருமாளை வழிபாடு செய்யலாம். சில பேர் வீடுகளில் நவராத்திரி வழிபாடு நடைபெறும். நவராத்திரி கொலு வைத்திருந்தால், நவராத்திரி கலசம் வைத்திருந்தால் சில பேர் பெருமாளுக்கு தளிகை போட மாட்டார்கள்.

- Advertisement -

நவராத்திரி வழிபாடு உங்களுடைய வீட்டில் இல்லை எனும் பட்சத்தில் நாளைய தினம் தாராளமாக நீங்கள் பெருமாளை மாவிளக்கு போட்டு வழிபாடு செய்யலாம். வீட்டில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் நாளை வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று அந்த பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து பெருமாள் தீர்த்தத்தை பருகி சடாரியை தலையில் வைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். நாளைய தினம் பெருமாள் வழிபாடு உங்கள் கடன் சுமையை முற்றிலுமாக குறைக்கும்.

கடன் தீர வாங்க வேண்டிய பொருள்

நாளைய தினம் கடைக்கு சென்று 1 கிலோ வெல்லம் வாங்க வேண்டும். கடையிலிருந்து வாங்கிய வெல்லத்தை தானமாக கொடுக்க வேண்டும். கோவிலில் இருக்கும் அர்ச்சகருக்கு, அதாவது ஒரு பிராமணருக்கு இந்த வெல்லத்தை நாளைய தினம் தானம் செய்தீர்கள் என்றால், உங்கள் கடன் சுமை முற்றிலும் குறையும். அதேபோல உங்க வீட்டு பக்கத்தில் ஏதாவது கோவிலில் குளம் இருக்கிறதா என்று பாருங்கள்.

- Advertisement -

1/2 கிலோ வெல்லம் வாங்கிக் கொண்டு போய் அந்த குளத்தில் உங்கள் கையாலேயே வெல்லத்தை கரைத்து விட வேண்டும். ஒரு சில துண்டுகளாக வெல்லத்தை நறுக்கி அந்த குளத்தில் உங்கள் கையால், வெல்லத்தை கரைக்கும் போது என்னுடைய கடன் சுமையும் இதே போல கரைந்து போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய கடன் காணாமலேயே போகும்.

இதையும் படிக்கலாமே: சுக்கிர யோகத்தைப் பெற ஏற்ற வேண்டிய விளக்கு

புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை கடனை கரைப்பதற்கு கஷ்டம் இல்லாமல் செய்யக்கூடிய பரிகாரம் இது. யாரும் தவற விடாதீர்கள். குளத்தின் அருகில் சென்று வெல்லத்தை கரைக்கும் போது ஜாக்கிரதையாக கரைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வீட்டில் பக்கத்தில் கோவிலில் குளங்கள் இல்லை என்றால் ஏதாவது, ஏறி ஆத்தங்கரையில் கூட இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்