மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை, கடன் பிரச்சனை தான் என்றால் அது மிகை ஆகாது. கடன் இல்லாமல் வாழும் மனிதர்கள் தான் பணக்காரர்கள். ஆனால் அப்படி கடன் இல்லாத பணக்காரர்கள் யார் இருக்கிறார்கள்? ஏழை பணக்காரன் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி எல்லோருமே கடங்காரர்களாகத் தான் இருக்கிறோம். இப்படி கோடிக்கணக்கான கடன்கள் நம்மை வாட்டி வதைத்து கொண்டிருந்தாலும், இந்த எளிய பரிகாரம் செய்வதன் மூலம் துர்கை அம்மன் கடன் இல்லாமல் காத்தருள்வதாக ஐதீகம் உண்டு. கடன் தீர்க்கும் துர்க்கை அம்மன் பரிகாரம் பற்றிய தகவல்களை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.
ஒருவருக்கு விதிப்படி கடன்கள் இருப்பதாக இருந்தால், அவ்விதியை மாற்றக்கூடிய சக்தி துர்க்கை அம்மனுக்கு உண்டு. சிலருக்கு என்னதான் முயற்சி செய்தாலும், கடன் தொல்லையிலிருந்து மட்டும் விடுபடவே முடியாது. அவசர தேவைக்கு கடன் வாங்கி இருப்பார்கள் ஆனால் அடுத்தடுத்து கடன் வாங்கித் தான் சமாளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள்.
கடன் வாங்கி அதை ரொட்டேஷன் செய்து கொள்பவர்களும் உண்டு. இவர்கள் அவர்களுடைய தொழில் அல்லது வணிக நோக்கத்திற்காக கடன் வாங்குபவர்கள், இவர்கள் இவ்விதியில் அடங்க மாட்டார்கள் ஆனால் எந்த நோக்கத்திற்காகவும் அல்லாமல், கடன் வாங்கவே கூடாது என்று நினைப்பவர்களும், காலம் முழுக்க கடனாளிகளாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இருந்தால், நிச்சயம் இந்த பரிகாரத்தை செய்து பயன் பெறலாம்.
துர்க்கை அம்மனுக்கு மிகவும் பிடித்தது எலுமிச்சை. இந்த எலுமிச்சை பழத்தை மாலையாக கட்டி துர்க்கை அம்மனுக்கு சாற்றி வந்தால் திருமண தடை அகலும். துர்க்கை அம்மனுக்கு மிகவும் பிடித்த மலரால் அர்ச்சனை செய்தால் தீராத கடன்களும் தீரும். துர்கை அம்மனுக்கு சிகப்பு நிற ரோஜா மலர்கள் என்றால் மிகவும் விருப்பம். வீட்டில் துர்க்கை அம்மன் படம் வைத்திருந்தால், சுத்தம் செய்து சிகப்பு நிற மலர்களால் முதலில் அலங்கரித்துக் கொள்ளுங்கள். சந்தன பொட்டிட்டு குங்குமம் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் சிகப்பு நிற ரோஜா மலர்களை அர்ச்சனைக்கு தனியாக உதிரியாக ஒரு தாம்பூல தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கீழ் வரும் இந்த துர்க்கை அம்மன் மந்திரத்தை உச்சரித்து 108 முறை சிகப்பு நிற ரோஜா பூ மலர்களால் துர்க்கை அம்மனை அர்ச்சிக்க வேண்டும்.
மந்திரம்:
சர்வ பாத வினிர்முக்தோ தான் தான்யா சுதந்தவிதஹ்,
மனுஷியோ மத்ப்ரஸதீன் பவிஷ்யதி நா சன்ஷாய்ஹ்!!!
இதையும் படிக்கலாமே:
வாழ்வில் வெற்றி பெற வளர்பிறை அஷ்டமி வழிபாடு
கடன் தீர துர்க்கை அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கும் பொழுது இரண்டு கிராம்பு துண்டுகளை போட்டு எறிய விடுங்கள். கற்பூரத்துடன் கிராம்பு மணம் வீடெங்கும் பரவட்டும். பின்னர் மனதார கடன் தீர துர்க்கை அம்மனிடம் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். விதியால் கடன் பட்டவர்கள் எவராயினும், உங்கள் மதியால் தான் அதிலிருந்து விடுபட வேண்டும். துர்க்கை அம்மன் அருளோடு இந்த தீராத கடன் பிரச்சினைகளில் இருந்து தீர்வதற்கு இம்முறை நல்லதொரு வழிமுறையை பிரார்த்தனையின் பொழுது சிந்தித்து யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுடைய சிந்தனை தடை இல்லாமல், நீங்கள் நினைத்தபடி வெற்றி அடையும், இதனால் கடன் தொல்லைகளில் இருந்து நீங்கள் எளிதாக விடுபடுவீர்கள்.